புத்தாண்டு பிறப்பையொட்டி, தமிழக கோயில்களில் சிறப்பு வழிபாடு – ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்

புத்தாண்டு பிறப்பையொட்டி, தமிழக கோயில்களில் சிறப்பு வழிபாடு – ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்

ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

புத்தாண்டு பிறப்பையொட்டி, தமிழக கோயில்களில் சிறப்பு வழிபாடு – ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்

தஞ்சை பெரியகோயிலில் ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, பெருவுடையாருக்கு பால், சந்தனம், தயிர், இளநீர், பன்னீர், திரவியப் பொடி உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பெருவுடையாருக்கு நடைபெற்ற மகா தீபாராதனையில் தஞ்சை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொரோனா விதிமுகளை பின்பற்றி சுவாமியை தரிசித்து சென்றனர்.

புத்தாண்டு பிறப்பையொட்டி, தமிழக கோயில்களில் சிறப்பு வழிபாடு – ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்

இதேபோல், தஞ்சையில் உள்ள பழமை வாய்ந்த டிஇஎல்சி பேராலயம் மற்றும் தூய பேதுரு தேவாலயத்தில், நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு, பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

புத்தாண்டு பிறப்பையொட்டி, தமிழக கோயில்களில் சிறப்பு வழிபாடு – ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், அக்னி தீர்த்த கடலில் நீராடி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, ராமநாத சுவாமி மற்றும் அம்பாள் பர்வத வர்த்தினியை நீண்ட வரிசைகளில் காத்திருந்து வழிபட்டு சென்றனர். வருடப் பிறப்பையொட்டி, ராமநாதசுவாமி கோயலில் 4 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை படிகலிங்க பூஜைக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

புத்தாண்டு பிறப்பையொட்டி, தமிழக கோயில்களில் சிறப்பு வழிபாடு – ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில், புத்தாண்டை ஒட்டி உற்சவருக்கு தங்கக்கவச உடை மற்றும் ஆபரணங்கள் சூடி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதேபோன்று, சண்முக பெருமாள் பச்சை நிற பட்டு உடுத்தியும், ஆறுமுக பெருமாள் தங்கத்தாலான 108 வில்வ இலை மாலை சூடியும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

புத்தாண்டு பிறப்பையொட்டி, தமிழக கோயில்களில் சிறப்பு வழிபாடு – ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்

காலை 6 மணி முதல் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனா கட்டுப்பாடு காரணமாக குறைந்த அளவிலான பக்தர்களே வருகை தந்து, சுவாமியை தரிசித்து சென்றனர்.