ஹத்ராஸ் சம்பவம்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நிறைவு!

 

ஹத்ராஸ் சம்பவம்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நிறைவு!

ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நிறைவடைந்துள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில், 19 வயதான இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். ஒரு வாரத்திற்கு மேலாக அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். டெல்லியில் நடைபெற்ற நிர்பயா சம்பவத்தை போலவே, இந்த பெண்ணுக்கும் அநீதி இழைக்கப்பட்டதால் நாடு முழுவதும் எதிர்ப்புக்குரல் கிளம்பியது.

ஹத்ராஸ் சம்பவம்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நிறைவு!

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் போராட்டத்தில் ஈடுபடவே, பதற்றத்தை கட்டுப்படுத்த அந்த பெண்ணின் உடலை இரவோடு இரவாக போலீசார் தகனம் செய்தனர். மேலும், ஹத்ராஸ் பகுதியில் யாரும் நுழையாத வண்ணம் தடை செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

ஹத்ராஸ் சம்பவம்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நிறைவு!

இதனிடையே இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அதோடு, உ.பி அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் சிபிஐ தரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை நிறைவடைந்திருக்கிறது. இது தொடர்பான அறிக்கையை உ.பி அரசிடம் புலனாய்வு குழு விரைவில் தாக்கல் செய்ய உள்ளது.