உலகின் மிக நீளமான ‘அடல் சுரங்கப்பாதை’: சிறப்பம்சங்கள் என்ன?

 

உலகின் மிக நீளமான ‘அடல் சுரங்கப்பாதை’: சிறப்பம்சங்கள் என்ன?

லே- மணாலியில் இருந்து சுமார் 9.02 கி.மீ தூரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அடல் சுரங்கப்பாதையின் சிறப்பம்சங்களை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

இமாச்சல பிரதேச மாநிலம் கிழக்கு பிர் பஞ்சால் மலைத்தொடரில், லே-மணாலி நெடுஞ்சாலையில் 9.02 கி.மீ தூரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த சுரங்கப்பாதை 6 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இதனை கட்ட கூடுதலாக கால அவகாசம் தேவைப்பட்டதால், 10 ஆண்டுகளுக்கு பிறகு இதன் கட்டுமானப் பணி அண்மையில் நிறைவடைந்தது. அப்பகுதியில் ஆண்டுதோறும் ஏற்படும் கடும் பனிச்சரிவின் காரணமாக போக்குவரத்து சேவைகள் சுமார் 6 மாத காலங்களுக்கு முடக்கப்படும். இதற்கு ஒரு தீர்வு அளிக்கும் விதமாகவே இந்த அடல் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது.

உலகின் மிக நீளமான ‘அடல் சுரங்கப்பாதை’: சிறப்பம்சங்கள் என்ன?

ஆஸ்திரேலிய நிறுவனமான எஸ்.எம்.இ.சி நிறுவனம் குதிரையின் லாடம் வடிவில் வடிவமைத்த உலகின் மிக நீளமான இந்த சுரங்கப்பாதை, கடல் மட்டத்தில் இருந்து 3,000மீ உயரத்தில் ரூ.4,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. மக்கள் இந்த சுரங்கப்பாதையை உபயோகிப்பதன் மூலம், சுமார் 46 கி.மீ பயண தூரத்தையும் 5 மணி நேர பயண நேரத்தையும் குறைக்க முடியும். அதுமட்டுமில்லாமல், சுரங்கப்பாதையில் ஒவ்வொரு 60 மீ இடைவெளியில் சிசிடிவி கேமராக்களும், ஒவ்வொரு 500 மீ இடைவெளியில் அவசர கால வெளியேற்றமும் (emergency exit) அமைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக நீளமான ‘அடல் சுரங்கப்பாதை’: சிறப்பம்சங்கள் என்ன?

அதே போல, அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு தீ ஹைட்ராண்டுகள் 10மீ அகலத்தில் அமைக்கப்பட்டிருப்பதோடு, இந்த சுரங்கப்பாதையில் நாள் ஒன்றுக்கு 3000 கார்களும் 1,500 சரக்கு வாகனங்களும் பயணிக்க முடியுமாம். 10.5மீ அகலமும் 5.51மீ உயரமும் கொண்ட இந்த சுரங்கப்பாதை மணாலியில் இருந்து லஹால் மற்றும் ஸ்பிட்டி பள்ளத்தாக்குடன் இணைக்கு நிலையில், வாகனங்கள் 80 கி.மீ வேகத்தில் செல்லும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக நீளமான ‘அடல் சுரங்கப்பாதை’: சிறப்பம்சங்கள் என்ன?

நம் நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் ஆட்சியின் போது, ரோஹ்தாங்கில் ரோப்வே கட்ட திட்டமிடப்பட்டது. பின்னர், இந்திரா காந்தி ஆட்சியில் மணாலிக்கும் லேவுக்கும் ஆண்டு முழுவதும் போக்குவரத்து வழங்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படாத நிலையில், பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் ஆட்சியில் தான் இந்த சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் உறுதியானது. அவரது நினைவாக இந்த சுரங்கப்பாதைக்கு “அடல் சுரங்கப்பாதை” என பிரதமர் மோடி பெயர் சூட்டினார் என்பது நினைவு கூரத்தக்கது.

.