பண்ணை வீட்டுக்கு வந்தது எஸ்பிபியின் உடல்… நாளை காலை 7 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி

 

பண்ணை வீட்டுக்கு வந்தது எஸ்பிபியின் உடல்… நாளை காலை 7 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி

எஸ்.பி.பியின் உடல் தாமரைப்பாக்கம் பண்ணைவீட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 50 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் இன்று பிற்பகல் காலமானார். இவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கத்தில் அமைந்துள்ள அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நாளை நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது. இதையடுத்து எஸ். பி. பி. யின் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்வதற்காக, பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகிறது.

பண்ணை வீட்டுக்கு வந்தது எஸ்பிபியின் உடல்… நாளை காலை 7 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி

இந்நிலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நுங்கம்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டுஇருந்த எஸ்பிபியின் உடல் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு வாகனத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது. புழல், செங்குன்றம் பகுதிகளில் எஸ்பிபியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் சாலையில் குவிந்ததால் உடலை பண்ணை வீட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. அவரது உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பண்ணை வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு உறவினர்கள் மட்டுமே பண்ணை வீட்டில் அனுமதிக்கப்பட்டனர். நாளை காலை 7 மணி முதல் திரை பிரபலங்கள், பொது மக்கள் எஸ்பிபியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.10 மணி முதல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கான பணிகள் தொடங்கி 12 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஸ்பிபி-யின் உடல் வைக்கப்பட்டுள்ள தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டின் முன்பு பொது மக்கள் குவிந்ததால் அவர்களை, காவல் துறையினர் விரட்டியடித்தனர்.