விண்வெளி வரலாற்றில் வேற லெவல் சாதனை… சுற்றுலா சென்ற நால்வரும் வெற்றிக்கரமாக பூமிக்கு திரும்பினர்!

 

விண்வெளி வரலாற்றில் வேற லெவல் சாதனை… சுற்றுலா சென்ற நால்வரும் வெற்றிக்கரமாக பூமிக்கு திரும்பினர்!

விண்வெளிக்குச் சுற்றுலாவா? இந்தக் கேள்வியை 10 வருடத்திற்கு முன்பு கேட்டிருந்தால் எவருமே சற்று திகைத்து தான் போயிருப்பார்கள். ஆனால் தகவல் தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் வளர்ந்த இக்காலக்கட்டத்தில் விண்வெளி சுற்றுலா என்பது சுண்டல் சாப்பிடுவது போல ஜூஜூபியான மேட்டராகப் பார்க்கப்படுகிறது. பல்வேறு நாட்டின் அரசுகள் மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களும் அறிவியல் ஆராய்ச்சி துறைக்குள் என்ட்ரி கொடுத்ததே அதற்குக் காரணம்.

விண்வெளி வரலாற்றில் வேற லெவல் சாதனை… சுற்றுலா சென்ற நால்வரும் வெற்றிக்கரமாக பூமிக்கு திரும்பினர்!

அறிவியல் ஆராய்ச்சி ஒருபுறம் இருந்தாலும் முற்றிலும் வணிக நோக்கத்திற்காகவே அதனை அந்நிறுவனங்கள் மேற்கொள்கின்றன என்பதையும் நாம் மறக்கக் கூடாது. அதில் அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரும் உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் முக்கியமானது. விண்வெளி சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம், சமீபத்தில் யாருமே செய்யாத சாதனையைச் செய்திருந்தது. ஆம் விண்வெளி வீரர்கள் அல்லாத பொதுமக்களில் நால்வரை விண்வெளி சுற்றுலாவுக்கு அனுப்பியது.

கடந்த 16ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5.32 மணிக்கு ஃபால்கான் ராக்கெட்டுடன் பொருத்தப்பட்ட விண்கலத்துடன் அந்த நால்வர் வெற்றிகரமாக விண்வெளிக்குச் சென்றனர். பாய்ந்தது. இந்த நால்வரும் சாதாரண மனிதர்கள். இவர்களுடன் எந்த விண்வெளி வீரர்களும் செல்லவில்லை. ஆகவே விண்வெளியில் புவிஈர்ப்பு சக்தியில்லாத இடத்தில் எவ்வாறு நடந்து கொள்வது, எவ்வாறு பயணிப்பது உள்ளிட்ட பயிற்சிகளை கடந்த 9 மாதங்களாக நால்வருக்கும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் வழங்கியிருந்தது.

விண்வெளி வரலாற்றில் வேற லெவல் சாதனை… சுற்றுலா சென்ற நால்வரும் வெற்றிக்கரமாக பூமிக்கு திரும்பினர்!

சுற்றுலாவில் ஷிப்ட் 4 பேமெண்ட் நிறுவனத்தின் நிறுவனர் ஜார்ட் ஐசக்மேன், 29 வயதான மருத்துவர் ஹேலே ஆர்சனாக்ஸ், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள் அமெரிக்க விமானப்படை முன்னாள் வீரர் கிறிஸ் செம்ப்ரோஸ்கி, பேராசிரியர் சியான் ப்ராக்டர் ஆகிய நால்வரும் சென்றனர். மொத்தம் மூன்று நாட்கள் என்று திட்டமிடப்பட்டிருந்த விண்வெளி சுற்றுலா இன்றோடு நிறைவடைந்தது. இச்சூழலில் இன்று சுற்றுலா முடிந்து வெற்றிக்கரமாக நால்வரும் பூமிக்குத் திரும்பினர். யாராலும் சாதிக்க முடியாத ஒன்றை ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் சாதித்துக் காட்டியுள்ளது அனைவரின் புருவத்தையும் உயர செய்துள்ளது.