“லாரிகளில் அதிக பாரம் ஏற்றிச்செல்ல தடை விதிக்க வேண்டும்”

 

“லாரிகளில் அதிக பாரம் ஏற்றிச்செல்ல தடை விதிக்க வேண்டும்”

தர்மபுரி

லாரிகளில் அதிகளவில் பாரம் ஏற்றிச் செல்வதை தமிழக அரசு தடை செய்ய வேண்டுமென, தென் மண்டல லாரி உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகப்பா தெரிவித்தார். தர்மபுரியில் நடைபெற்ற சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மோட்டார் வாகன சட்டம் அனுமதிக்கும் அளவைவிட அதிக பாரம் ஏற்றுவது தமிழகத்தில் தொடர்வதாகவும், இதனால், விபத்து, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட

“லாரிகளில் அதிக பாரம் ஏற்றிச்செல்ல தடை விதிக்க வேண்டும்”

பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், புதிய மோட்டார் வாகன சட்டத்தில், விதி மீறலில் ஈடுபடும் லாரிகளுக்கு இரண்டாயிரம் ரூபாய் முதல் இருபதாயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்க வழிவகை செய்வதாக கூறிய அவர், இதுபோன்ற பிரச்சினைகளை தடுக்கும் விதமாக லாரிகளில் அதிக பாரம் மற்றும் அதிக உயரம் மற்றும் அகலத்துக்கு பாரம் ஏற்றிச் செல்ல அரசு தடை விதிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுகொண்டார்.