டெல்லி துக்ளகாபாத் குடிசை பகுதிகளில் பயங்கர தீ விபத்து…. தீ அணைக்கும் பணியில் 30 தீயணைப்பு வண்டிகள்

டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள துக்ளகாபாத் குடிசை பகுதிகளில் நள்ளிரவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்துக்கு 30 தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்றன. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தீவிரமாக போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என தகவல். அதேசமயம் பெரிய அளவில் பொருட்சேதம் ஏற்பட்டு இருக்கும் என தெரிகிறது.

தீ அணைப்பு வண்டிகள்

இந்த தீ விபத்து குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், குடிசைகளில் தீ விபத்து ஏற்பட்ட உடனேயே அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டனர். அதேசமயம் பெரிய தீ விபத்து என்பதால் எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என தெரிவித்தனர். இது தொடர்பாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், தீ விபத்து குறித்து எங்களுக்கு 12.15 மணிக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடததுக்கு 30 தீயணைப்பு வண்டிகள் சென்றன. தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இதுவரை (அதிகாலை 3.30 மணி வரை) இந்த விபத்தில் எந்தவொரு உயிர் இழப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என தெரிவித்தார்.

காவல் துறை அதிகாரி

தென்கிழக்கு டெல்லியின் காவல்துறை துணை ஆணையர் ராஜேந்திர பிரசாத மீனா துக்ளகாபாத் தீ விபத்து குறித்து கூறுகையில், துக்ளகாபாத் குடிசைகளில் தீ விபத்து குறித்து எங்களுக்கு 1 மணிக்கு தகவல் கிடைத்தது. அனைத்து காவல்துறை பணியாளர்களும் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றனர். 1,000 முதல் 2,000 குடிசைகளில் தீ பற்றி இருக்கும் என தெரிவித்தார்.

Most Popular

2 மாசத்துக்கு பயன்பாட்டு மின் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி பண்ணுங்க.. காங்கிரஸ் கோரிக்கை..

கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடைபெற்று வருகிறது. நாட்டின் மற்ற மாநிலங்கள் போல் கோவா மக்களும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், நிதி நெருக்கடியால்...

பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தில் பிறந்ததால் குழந்தைக்கு கிருஷ்ணா என பெயர் வைத்த முஸ்லிம் தந்தை

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வருபவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆஜிஸ் கான். இவருக்கு கடவுள் கிருஷ்ணர் பிறந்த தினமான ஜென்மாஷ்டமி அன்று ஆண் குழந்தை பிறந்தது. கிருஷ்ணர் பிறந்த தினத்தில்...

நம்பிக்கை கொடுத்த பொதுத்துறை வங்கி… சென்ட்ரல் பேங்க் இந்தியா லாபம் ரூ.147 கோடியாக உயர்ந்தது…

பொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.147.21...

48 மணி நேரத்துல மன்னிப்பு கேளுங்க.. சிவ சேனா தலைவருக்கு நோட்டீஸ்… மறைந்த பாலிவுட் நடிகரின் உறவினர்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் திரையுலகை மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனாவின் பத்திரிகையான சாமனாவில் சஞ்சய் ரவுத் எழுதியுள்ள...
Do NOT follow this link or you will be banned from the site!