பிரதமர் மோடிக்கு அதி நவீன ‘தனி விமானம்’. – டெல்லி வந்தது

 

பிரதமர் மோடிக்கு அதி நவீன ‘தனி விமானம்’. – டெல்லி வந்தது

அமெரிக்க அதிபருக்கான அதி நவீன தனி விமானம் போலவே, பாரதப் பிரதமர் மோடிக்கும் அதி நவீன தனி விமானம் ஒன்று புதிதாக வாங்கப்பட்டுள்ளது. அந்த விமானம் தற்போது டெல்லி வந்தடைந்துள்ளது.

பிரதமர் மோடிக்கு அதி நவீன ‘தனி விமானம்’. – டெல்லி வந்தது

அமெரிக்காவில் உள்ள போயிங் விமான நிறுவனத்திடமிருந்து ரூ 8,400 கோடி செலவில் 2 அதி நவீன தனி விமானங்களுக்கு இந்தியா சார்பில் “ஆர்டர்” செய்யப்பட்டிருந்தன.

அதில் ஒரு விமானம் தற்போது டெல்லி வந்தடைந்தது. இந்த விமானத்தை பிரதமர் மோடி, மற்றும் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிரதமர் மோடிக்கு அதி நவீன ‘தனி விமானம்’. – டெல்லி வந்தது

இந்த விமானம் அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் “ஏர்போர்ஸ் -1” ரகத்தை சேர்ந்தது. இந்த விமானத்தில் ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 10 ஆயிரம் கி.மீ. வரை பறக்கலாம். 17 மணி நேரத்திற்கு இடை நில்லாமல் செல்ல முடியும். அதாவது டெல்லியில் கிளம்பி அமெரிக்காவின் நியுயார்க் வரை இடை நிற்காமல் செல்லலாம்.

விமானத்தில் போர்க் கருவிகள் உண்டு. ராடார் கருவிகளுக்கு இந்த விமானம் பறந்து செல்வது தெரியாது.இது தவிர இந்த விமானத்தை ஏவுகணைகள் கூட குறி பார்த்து அழிக்க முடியாது என்பது தனிச் சிறப்புகள் ஆகும்.

மேலும் விமானத்தினுள் கூட்ட அரங்கு, விருந்தினர் அறை, செய்தியாளர்கள் சந்திப்பு அறை படுக்கை அறை. சமையல் அறை, ரகசிய பாதுகாப்பு அனைத்து வித கணிணி வசதிகள் போன்றவை உள்ளன.

  • இர.போஸ்