”நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட செயலிகளுடன் வெளிவருகிறது பிளே ஸ்டேஷன் 5 !’

 

”நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட செயலிகளுடன் வெளிவருகிறது பிளே ஸ்டேஷன் 5 !’

பிளே ஸ்டேஷன் 5 கேமிங் சாதனத்தில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ உள்ளிட்ட ஸ்டீரிமிங் தளங்களின் வீடியோ சேவைகளையும் பெறலாம் என தெரியவந்துள்ளது.

”நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட செயலிகளுடன் வெளிவருகிறது பிளே ஸ்டேஷன் 5 !’

கேமிங் துறையில் சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் முக்கிய சாதனமாக பார்க்கப்படுகிறது. அவ்வப்போது இந்த சாதனத்தை பல அப்டேட்களுடன் புது வெர்சன்களாக அறிமுகப்படுத்தி வரும் சோனி, விரைவில் பிளே ஸ்டேஷன் 5 கேமிங் சாதனத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிலையில் இந்த சாதனமானது வெறும் கேமிங் சாதனமாக மட்டுமில்லாமல், பொழுதுபோக்கிற்கான சாதனமாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்த கேமிங் சாதனத்தில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, யூடியூப், டிஸ்னி பிளஸ் உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய ஸ்டீரீமிங் சேவை நிறுவனத்தின் செயலிகள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

”நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட செயலிகளுடன் வெளிவருகிறது பிளே ஸ்டேஷன் 5 !’

மேலும், இதற்கான ரிமோட்டில் நெட்பிளிக்ஸ், யுடியூப் உள்ளிட்ட செயலிகளுக்கு நேரடியாக செல்லும் வகையில் சிறப்பு பட்டன்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், மேலும், வீடியோ அனுபவத்தை சிறப்பாக பெறும் வகையில், பாஸ்ட் பார்வர்ட், ரீவைண்ட், வால்யூம் அட்ஜஸ்ட்மெண்ட், பவர் ஆப்ஷன்களும் தரப்பட்டிருப்பதாக சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேமிங் சாதனத்தின் ஹோம் திரையிலேயே கேம்ஸ் மற்றும் வீடியோ என இரு பிரிவுகளாக காட்சியளிக்கும் என்றும் தங்களுக்கு விருப்பமானவற்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ள சோனி, யுடியூப் கொடுக்கப்பட்டிருப்பதன் மூலமாக, கேம்ஸ் விளையாடுவோர் அந்த சாதனத்தில் இருந்தபடியே தங்களது விளையாட்டை யுடியூப் மூலமாக பிராட்கேஸ்ட் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

”நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட செயலிகளுடன் வெளிவருகிறது பிளே ஸ்டேஷன் 5 !’

ஏற்கனவே இந்த கேமிங் சாதனத்திற்கு எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி உள்ள நிலையில், தற்போதைய இந்த கூடுதல் தகவல், பிளே ஸ்டேஷன் 5 கேமிங் சாதனத்தின் விற்பனையை பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நவம்பர் 10 மற்றும் 19ம் தேதி உலகளவில் பிளே ஸ்டேஷன் 5 அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்து இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்