இந்தியாவில் சோனி நிறுவனத்தின் இரண்டு புதிய வயர்லெஸ் இயர்போன்கள் அறிமுகம்

 

இந்தியாவில் சோனி நிறுவனத்தின் இரண்டு புதிய வயர்லெஸ் இயர்போன்கள் அறிமுகம்

டெல்லி: இந்தியாவில் சோனி நிறுவனத்தின் இரண்டு புதிய வயர்லெஸ் இயர்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் சோனி நிறுவனத்தின் இரண்டு புதிய வயர்லெஸ் இயர்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது WF-SP800N மற்றும் WF-XB700 ஆகிய மாடல்கள் ஆகும். சோனி நிறுவனத்தின் ரீடெயில் ஸ்டோர்களில் கிடைக்கும் இந்த இயர்போன் மாடல்களின் விலையை பொறுத்தவரை WF-SP800N ரூ.18,990 எனவும், WF-XB700 ரூ.9,990 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் WF-XB700 மாடல் இன்று முதல் விற்பனைக்கு வெளியாகிறது. அதேபோல WF-SP800N மாடல் நாளை மறுதினம் (ஜூன் 26) முதல் விற்பனைக்கு வெளியாகவுள்ளது. WF-XB700 மாடல் கருப்பு மற்றும் நீல நிறத்திலும், WF-SP800N மாடல் கருப்பு, வெள்ளை மற்றும் நீல நிறத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஏர்பாட்ஸ், சாம்சங் கேலக்சி பட்ஸ் ப்ளஸ், ஜாப்ரா எலைட் 75டி ஆகிய சாதனங்களுக்கு போட்டியாக WF-SP800N மாடல் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. WF-SP800N மாடலின் சிறப்பம்சங்களாக ஆக்டிவ் நாய்ஸ் கேன்சல், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட், 9 மணி நேர பேட்டரி திறன், குயிக் சார்ஜிங், வாய்ஸ் அசிஸ்டென்ட், யு.எஸ்.பி டைப் சி சார்ஜிங், ப்ளூடூத் ஆகியவை இடம்பெற்றுள்ளன. WF-XB700 மாடல் சிறப்பம்சங்களாக எக்ஸ்ட்ரா பேஸ் ரேஞ்ச், IPX4 வாட்டர் ரெசிஸ்டன்ட், 18 மணி நேர பேட்டரி திறன், ப்ளூடூத், யு.எஸ்.பி டைப் சி சார்ஜிங் ஆகியவை இடம்பெற்றுள்ளன.