புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிய பாலிவுட் வில்லன் நடிகரை சந்தேகிக்கும் சிவ சேனா…

 

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிய பாலிவுட் வில்லன் நடிகரை சந்தேகிக்கும் சிவ சேனா…

நாடு தழுவிய லாக்டவுன் காரணமாக மகாராஷ்டிராவில் செய்வதறியமால் தவித்து வந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்கள் செல்ல பஸ் வசதி உள்பட பல்வேறு உதவிகளை பாலிவுட் நடிகர் சோனு சூட் செய்தார். மத்திய பிரதேச பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவரே சோனு சூட்டிடம் நேரடியாக உதவி கேட்டது குறிப்பிடத்தக்கது. படத்தில் வில்லனாக நடித்தாலும் ரியல் லைப்பில் நெருக்கடியில் சிக்கி தவித்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவி மக்களின் மனதை வென்றார் சோனு சூட்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிய பாலிவுட் வில்லன் நடிகரை சந்தேகிக்கும் சிவ சேனா…

சோனு சூட்டின் பணியை மகாராஷ்டிரா கவர்னரே தனிப்பட்ட முறையில் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. ஆனால் மகாராஷ்டிராவின் ஆளும் கூட்டணி கட்சியை சேர்ந்த சிவசேனாவோ சோனுசூட்டை சந்தேகக்கண் கொண்டு பார்க்கிறது. சிவ சேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் இது தொடர்பாக டிவிட்டரில், சோனு சூட் நல்ல நடிகர். இங்கே திரைப்படங்களுக்கு வித்தியாசமான இயக்குனர். அவர் பணி நன்றாக இருக்கிறது. ஆனால் அதன பின்னால் ஒரு அரசியல் இயக்குனர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என பதிவு செய்த இருந்தார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிய பாலிவுட் வில்லன் நடிகரை சந்தேகிக்கும் சிவ சேனா…

முன்னதாக சிவ சேனாவின் அரசியல் பத்திரிகையான சாமனாவில், கொரோனா வைரஸ் லாக்டவுன் சமயத்தில் சோனு சூட் என்ற புதிய மகாத்மா திடீரென தோன்றினார். லட்ச கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு சோனு சூட் தனி ஆளாக போக்குவரத்து ஏற்பாடு செய்துள்ளார். அதேவேளையில் அவரது பணிகளை மகாராஷ்டிரா கவர்னர் பி.எஸ். கோஷியாரியும் பாராட்டியுள்ளார். இது புலம் பெயர்ந்தோருக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் எதுவும் செய்யவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. லாக்டவுன் மத்தியில் சோனு சூட் பஸ்களை பெற்றுள்ளார். மாநிலங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுமதிக்கவில்லை என்றால் மக்கள் எங்கு செல்கிறார்கள் என சஞ்சய் ராவத் தெரிவித்து இருந்தார்.