“மாணவர்களின் ஒப்புதலுடன் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்”.. சோனியா காந்தி வலியுறுத்தல்!

“மாணவர்களின் ஒப்புதலுடன் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்”.. சோனியா காந்தி வலியுறுத்தல்!

மாணவர்களின் ஒப்புதலுடன் அரசு முடிவெடுக்க வேண்டும் என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.

செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள நீட் மற்றும் ஜேஇஇ தேர்வை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என்பதே பலரின் ஒருமித்த குரலாக இருக்கிறது. மாணவர்கள் உட்பட அனைவரும் தேர்வை ஒத்திவைக்கக் கோரி மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என தேர்வு முகமை தெரிவித்து விட்டது. அதே போல, மாணவர்கள் தேர்வு எழுத விரும்புவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே நடைபெற உள்ள இந்த தேர்வுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் கூட நடைபெற்றது.

“மாணவர்களின் ஒப்புதலுடன் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்”.. சோனியா காந்தி வலியுறுத்தல்!

இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடனான ஆலோனைக்கு பிறகு, நீட் தேர்வை ஒத்திவைக்குமாறு 6 மாநில அமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இன்று காலை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, மாணவர்களின் பாதுகாப்புக்காக உரத்தகுரல் எழுப்புவோம் என்றும் தேர்வுகளை மாணவர்களுக்காக அரசு ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தி வீடியோ வெளியிட்டிருந்தார்.

“மாணவர்களின் ஒப்புதலுடன் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்”.. சோனியா காந்தி வலியுறுத்தல்!

இதனைத்தொடர்ந்து, காங்கிரஸின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மாணவர்களின் ஒப்புதலுடன் அவர்களின் எதிர்காலம் பற்றி மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் எதிர்காலத்தை உருவாக்க உள்ள மாணவர்களின் நலனைக் காக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.