சோனியா காந்திக்கு நுரையீரல் தொற்று அதிகரிப்பு!

 

சோனியா காந்திக்கு நுரையீரல் தொற்று அதிகரிப்பு!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நுரையீரல் தொற்று தீவிரமடைந்துள்ளது.

சோனியா காந்திக்கு நுரையீரல் தொற்று அதிகரிப்பு!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அடிக்கடி அமெரிக்கா சென்று வந்தார். அத்துடன் உடல்நலனை கருத்தில் கொண்டு அவர் கடந்த 2017-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து பிரதமர் தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து 2019-ல் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவிலிருந்து விலகினார். இதையடுத்து மீண்டும் தற்காலிக தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்று கொண்டார். இருப்பினும் தொடர்ந்து அவரது உடல்நலத்தில் பல சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது.

சோனியா காந்திக்கு நுரையீரல் தொற்று அதிகரிப்பு!

இந்நிலையில் சோனியா காந்திக்கு நுரையீரல் தொற்று அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஆஸ்துமா பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வரும் சோனியா காந்தி தற்போது டெல்லியில் தனது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருப்பதால் சென்னை அல்லது கோவாவுக்கு அழைத்து செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சோனியா காந்தி உடன் ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.