“ஐபிஎல் முக்கியமா இல்லையானு உங்களுக்கு வலி வந்தா தெரியும்” – விளாசிய ஆடம் ஜாம்பா!

 

“ஐபிஎல் முக்கியமா இல்லையானு உங்களுக்கு வலி வந்தா தெரியும்” – விளாசிய ஆடம் ஜாம்பா!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் ஐபிஎல் முக்கியமா என்று ஒரு கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவே சுடுகாடாக மாறிக் கொண்டிருக்கும்போது மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே ஐபிஎல் நடத்தப்படுவதாக ஒரு சாரார் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கில்கிறிஸ்ட் இந்தச் சந்தேகத்தை எழுப்பினார்.

Adam Zampa banned for a game for uttering 'audible obscenity'

இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும். கொரோனா அச்சம் இருக்கும் வீரர்கள் எங்களிடம் தெரிவித்தால் அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வோம் என பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியிருக்கிறார். கொரோனாவால் நாட்டு மக்கள் அனைவரும் அச்சத்தில் இருக்கும்போது ஐபிஎல் பலருக்கு ஆறுதலாக இருக்கிறது என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். இதனால் இணையத்தில் ஐபிஎல் வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதம் போய்க் கொண்டிருக்கிறது.

“ஐபிஎல் முக்கியமா இல்லையானு உங்களுக்கு வலி வந்தா தெரியும்” – விளாசிய ஆடம் ஜாம்பா!

தற்போது ஐபிஎல் ஆறுதலாக இருக்கிறது என்ற கருத்தைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜாம்பா. தொடரின் பாதிலியே நாடு திரும்பிய ஜாம்பா மக்களின் உயிர்களைக் காட்டிலும் கிரிக்கெட் முக்கியமில்லை என்பதால் வந்துவிட்டேன் என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், “கொரோனா காலத்தில் ஐபிஎல் நிறைய பேருக்கு ஆறுதலாக இருப்பதாகக் கூறுகிறார்கள். அப்படிக் கூறுபவர்களின் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருந்தால் அவர்கள் கிரிக்கெட் குறித்து கவலைப்பட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்” என்றார்.

“ஐபிஎல் முக்கியமா இல்லையானு உங்களுக்கு வலி வந்தா தெரியும்” – விளாசிய ஆடம் ஜாம்பா!

இதற்கு நடுவே கொரோனா அச்சம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து பல வீரர்கள் பாதியிலேயே விலகினர். குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை ஆகியோர் ஆஸ்திரேலியாவிற்குப் புறப்பட்டுச் சென்றனர். மேக்ஸ்வெல், கிறிஸ் லின் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் முடிந்த பிறகே வருவோம் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.

“ஐபிஎல் முக்கியமா இல்லையானு உங்களுக்கு வலி வந்தா தெரியும்” – விளாசிய ஆடம் ஜாம்பா!

தொடர் முடிந்த பிறகு தங்களுக்கென்று தனி விமானம் அனுப்ப வேண்டும் எனவும் அந்நாட்டு அரசிடம் கேட்டுள்ளார்கள். ஆனால் பிரதமர் ஸ்காட் மோரிசன், இந்தியாவுடனான விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளார். வீரர்கள் தங்களது சொந்த செலவில் ஆஸ்திரேலியா திரும்பிக் கொள்ளலாம்; அரசு பொறுப்பேற்காது என்றும் கூறினார். மே 15ஆம் தேதி வரை இந்தியாவுடனான விமானப் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.