மொபைல், கணினி என தொடர்ந்து பார்த்துகொண்டே இருப்பவரா… கண்களைப் பாதுகாக்க சில டிப்ஸ்

மொபைல், கணினி என தொடர்ந்து பார்த்துகொண்டே இருப்பவரா… கண்களைப் பாதுகாக்க சில டிப்ஸ்

தொழில்நுட்பம் பெருக பெருக பல வசதிகள் நமக்குக் கிடைக்கின்றன என்பதை மறுக்க முடியாது. 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒருவருக்கு தபால் எழுதி, அது செல்ல இரண்டு நாள், அவர் கடிதம் எழுதி திரும்ப வர இரண்டு நாள்… இடையில் விடுமுறைகள் வேறு. ஆக, ஒரு கடிதத்திற்கு பதில் தெரிய ஒரு வாரம் காத்திருந்த காலம் மாறிப்போச்சு. சில நொடிகளில் உங்கள் மின்னஞ்சல் உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் அனுப்பலாம். அவர் பதில் அனுப்பிய சில நொடிகளில் உங்களை வந்தடையச் செய்யும்.

மொபைல், கணினி என தொடர்ந்து பார்த்துகொண்டே இருப்பவரா… கண்களைப் பாதுகாக்க சில டிப்ஸ்

மொமைல், லேப்டாப் என நீண்ட நேரம் அவற்றோடு செலவிடும் தலைமுறையாக இது மாறிவிட்டது. அதனால், பயன்களைப் போலவே தொந்திரவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக, நீண்ட நேரம் அதிக வெளிச்சம் உமிழும் திரையைப் பார்த்துக்கொண்டே இருக்கும் சூழல் பலருக்கும்.

சிலர் வேலை நிமித்தம் ஸ்கிரினைப் பார்க்க வேண்டியிருக்கும். ஆனால், பலர் மொபைலைப் பார்க்காமல் இருக்கவே முடியாது. வேலைக்காகப் பார்த்தாலும் வேடிக்கைக்காகப் பார்த்தாலும் கண்கள் அடையும் சோர்வு ஒன்றுதான். அதனால், கண்களைப் பாதுகாக்க சில வழிகளைப் பார்ப்போம்.

மொபைல், கணினி என தொடர்ந்து பார்த்துகொண்டே இருப்பவரா… கண்களைப் பாதுகாக்க சில டிப்ஸ்

நீங்கள் டிவி, மொபைல், கணினி எதைப் பயன்படுத்தினாலும் நல்ல வெளிச்சம் உள்ள இடமாக இருக்கட்டும். இருட்டான அறையில் வெளிச்சமான ஸ்கிரினைப் பார்ப்பது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

கணினியில் வேலைப் பார்பவர் எனில், நீண்ட நேரம் ஸ்கிரினையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டாம். 20 நிமிடங்களுக்கு ஒருமுறை ஐந்து நிமிடங்கள் கண்களை ஸ்கிரினிலிருந்து மாற்ற வேண்டும். ஜன்னலுக்கு வெளியே உள்ள பசுமையான இடத்தைப் பார்ப்பது நல்லது அல்லது கண்களை மூடி அவற்றிற்கு ஓய்வளிக்கலாம். அவ்வப்போது குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவலாம்.

மொபைல், கணினி என தொடர்ந்து பார்த்துகொண்டே இருப்பவரா… கண்களைப் பாதுகாக்க சில டிப்ஸ்

கணினி ஸ்கிரினிலிருந்து 50 செமீ முதல் 90 செமீ இடைவெளியில் உங்கள் கண்கள் இருக்கும்படி அமரவும். அமரும்போது நிமிர்ந்து அமர்ந்து பழகவும்.

உறங்குவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னாவது மொபைல், லேப்டாப், டிவி என அனைத்து வகை ஸ்கிரினிங் டையத்தை முடித்துக்கொள்ளுங்கள். கண்களுக்கு மட்டுமல்ல மனத்திற்கும் நல்லது.

மொபைல், கணினி என தொடர்ந்து பார்த்துகொண்டே இருப்பவரா… கண்களைப் பாதுகாக்க சில டிப்ஸ்

சத்தான உணவும் கண்களைப் பாதுகாக்கும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை கீரை, முட்டை, கேரட் உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு அதில் உள்ள நச்சுப் பொருட்களால் பார்வை நரம்புகளில் பாதிப்பு ஏற்படக்கூடும். அதனால், புகைப் பழக்கம் இருப்பவர்கள் அதைக் கைவிடுவதே நல்லது.

மொபைல், கணினி என தொடர்ந்து பார்த்துகொண்டே இருப்பவரா… கண்களைப் பாதுகாக்க சில டிப்ஸ்

மொபைலில் வீடியோ கேம் விளையாடுபவர்களுக்கு இரண்டு பிரச்னைகள் உள்ளன. ஒன்று, கேம் ஆர்வத்தில் நீண்ட நேரம் ஸ்கிரினைப் பார்ப்பார்கள். அடுத்து, கேம் சுவாரஸ்யத்தில் கண்களுக்கு மிக அருகில் ஸ்கிரினை வைத்துக்கொள்வார்கள். இரண்டுமே கண்களுக்கு ஆபத்தானது. எனவே, குறிப்பிட்ட இடைவெளியில் வைப்பதோடு 20 நிமிடம், 30 நிமிடம் என மொபைலில் அலாரம் செட் பண்ணிக்கொள்வது நல்லது.

மொபைல், கணினி என தொடர்ந்து பார்த்துகொண்டே இருப்பவரா… கண்களைப் பாதுகாக்க சில டிப்ஸ்

நீரிழிவு, ரத்த அழுத்தம் இருப்பவர்கள் சீரான இடைவெளியில் கண் மருத்துவரிடம் கண்களின் பார்வைத் திறனை பரிசோதனை செய்துகொள்வது மிகவும் அவசியம். இதில் அலட்சியம் காட்டக்கூடாது.

இறுதியாக, ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் நன்கு ஆழ்ந்து தூங்க வேண்டியது அவசியம். உறங்கும் அறையில் வெளிச்சம் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.