கழுதை இறைச்சி சாப்பிட்டால் உடலுறவில் ஆற்றல் அதிகரிக்குமா? – சக்கை போடு போடும் வியாபாரம்!

 

கழுதை இறைச்சி சாப்பிட்டால் உடலுறவில் ஆற்றல் அதிகரிக்குமா? – சக்கை போடு போடும் வியாபாரம்!

எங்கோ யாரோ கிளப்பி விட்டதை உண்மையென நம்பி அதனைப் பரிசோதனை செய்து பார்ப்பதில் இந்திய மக்களுக்கு நிகர் அவர்களே. ஒரு விலங்கின் பாலை குடித்தால் ஆற்றல் கிடைக்கும், ரத்தத்தைக் குடித்தால் குதிரை பலம் கிடைக்கும் என்பது போன்ற பல்வேறு வதந்திகள் கிளப்பப்பட்டுள்ளன. அதனை உண்மை என நம்பும் மூட நம்பிக்கையால் பல உயிரினங்களை பொழி போட்டிருக்கிறார்கள். இது இந்தியாவில் மட்டுமில்லை சீனா உள்பட பல்வேறு உலக நாடுகளில் மூட நம்பிக்கைகளை மக்கள் நம்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

கழுதை இறைச்சி சாப்பிட்டால் உடலுறவில் ஆற்றல் அதிகரிக்குமா? – சக்கை போடு போடும் வியாபாரம்!

அந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பது கழுதை இறைச்சி சாப்பிட்டால் பாலுறவு ஆற்றல் அதிகமாகும் என்ற தகவல். கழுதை இறைச்சியை நவீன வயகரா என்று அழைக்கிறார்கள். அந்தளவிற்கு வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் அதன் இறைச்சி ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சினைகளைத் தீர்ப்பதாகவும் ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. ஆந்திர மாநிலத்திலேயே இந்தத் தகவல் மக்களிடையே வேரூன்றி இருக்கிறது. இதனால் கழுதைகள் அதிகளவில் கொல்லப்படுவதால் இந்தியாவில் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதாக விலங்கு நல ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கழுதை இறைச்சி சாப்பிட்டால் உடலுறவில் ஆற்றல் அதிகரிக்குமா? – சக்கை போடு போடும் வியாபாரம்!

மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலிருந்து ஆந்திரப் பிரதேசத்துக்கு கழுதைகள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, குண்டூர், பிரகாசம் ஆகிய மாவட்டங்களில் கழுதை இறைச்சி வியாபாரம் சக்கை போடு போடுகிறதாம். ஒரு கழுதை 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. அவற்றின் இறைச்சி ஒரு கிலோ 600 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது. இந்த இறைச்சியை கோட் வேர்டாக “பூபி” என்று அழைக்கிறார்கள்.

கழுதை இறைச்சி சாப்பிட்டால் உடலுறவில் ஆற்றல் அதிகரிக்குமா? – சக்கை போடு போடும் வியாபாரம்!

இதுதொடர்பாக விலங்கு நல ஆர்வலர் கோபால் என்பவர் கூறுகையில், “ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தச் சந்தை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளிலும் குறைந்தது 100 கழுதைகள் வெட்டப்படுகின்றன. இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் “விலங்கு உணவு” பிரிவில் கழுதை இறைச்சி சேர்க்கப்படவில்லை. ஆகவே அதனை வெட்டுவதும் உண்பதும் சட்டவிரோதமானது. யாருக்கும் சந்தேகம் வராதபடி மாடு மற்றும் ஆட்டிறைச்சியுடன் மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுகிறது. தவிர சீனாவிற்கும் ஏற்றுமதியாகிறது” என்றார்.

கழுதை இறைச்சி சாப்பிட்டால் உடலுறவில் ஆற்றல் அதிகரிக்குமா? – சக்கை போடு போடும் வியாபாரம்!

சீனாவின் பாரம்பரிய மருத்துவத்தின்படி கழுதை இறைச்சியில் குறைந்த கொழுப்பு இருப்பதால், அதை உண்டால் பாலுறவு கொள்ளும்போது அதிக ஆற்றல் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தவறான தகவல் பரவி பாலுறவு ஆற்றலுக்கான மருந்தாக கழுதை இறைச்சி பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு அதிகளவு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய இந்தியாவிலிருந்து அதிகப்படியான கழுதைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் இந்தியாவில் கழுதைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. கடந்த 10 வருடத்தில் மட்டும் அவற்றின் எண்ணிக்கை 60 சதவீத அளவிற்குக் குறைந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக ஆர்வலர்கள் கூறுகிரார்கள்.

கழுதை இறைச்சி சாப்பிட்டால் உடலுறவில் ஆற்றல் அதிகரிக்குமா? – சக்கை போடு போடும் வியாபாரம்!

இந்தக் கட்டுக்கதையானது ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்திலுள்ள ஸ்டூவர்புரம் என்ற கிராமத்திலிருந்து உருவானது என்று சொல்லப்படுகிறது. வீடுகளில் கொள்ளையடிக்கும் திருடர்கள் வேகமாக ஓடுவதற்கும் அவர்களின் செயல்திறனுக்கும் கழுதை ரத்தம் பயன்படுவதாக நம்ப தொடங்கினர். அவர்கள் திருடச் செல்வதற்கு முன்பு கழுதை ரத்தத்தைக் குடித்துவிட்டே செல்வார்களாம். இப்போதும் கூட அங்கு வசிக்கும் மீனவர்களில் சிலர் கடலுக்குச் செல்லும் முன்னர் கழுதை ரத்தம் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.