Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் ஸ்ட்ரெஸ்க்கு குட் பை சொல்ல ஈஸியான சில வழிகள்! #Stress

ஸ்ட்ரெஸ்க்கு குட் பை சொல்ல ஈஸியான சில வழிகள்! #Stress

ஸ்ட்ரெஸ் – இந்த ஒற்றை வார்த்தைதான் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. அலுவலக டென்ஷன்கள், உறவுகள் தரும் தொல்லைகள், நண்பர்களால் ஏற்படும் சிக்கல்கள், சமூக பிரச்சனைகள் குறித்த கவலைகள்… எனக் காரணங்கள் வேறு வேறாக இருக்கலாம். ஆனால், அதனால் அடையும் ஒரே விஷயம் ஸ்ட்ரெஸ்.

ஸ்ட்ரெஸைக் கையாளக் கற்றுக்கொள்வதை விட வேறு சிரமமான வித்தை இல்லை. ஏனெனில், இந்த வித்தையை யாருக்கும் முன்னால் செய்ய வேண்டியிருக்காது. உங்கள் மனத்தோடு போராட வேண்டியிருக்கும்.

அதிகப்படியான ஸ்ட்ரெஸ், உடல் நலத்தைப் பாதிக்கும். உங்களின் வழக்கமான செய்ற்பாடுகளை முடக்கும். இதனால் மனப்பதற்றம் இன்னும் அதிகமாகும். அதனால், உங்களின் அன்றாட வாழ்வில் மிக மெலிதாக ஸ்ட்ரெஸ் எட்டிப்பார்க்கத் தொடங்கினால் எச்சரிக்கையாகி விடுங்கள். அதை இயல்பாகக் கையாளப் பழகுங்கள். அதற்கான சில ஈஸியான வழிகள்.

இப்போது பலரும் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணியாற்றுவதால், வேலையைக் குறித்த நேரத்தில் முடிக்க முடியவில்லை. அதனால் ஏற்படும் டென்ஷன், ஸ்ட்ரெஸ்ஸாக மாறுகிறது. இதைத் தவிர்க்க அன்றாட வேலைகளை காலையிலேயே திட்டமிடுங்கள். குறிப்பிட்ட நேரத்துக்கு அலாரம் செட் பண்ணிக்கொண்டு வேலையைத் தொடங்குங்கள். வேலை நேரத்தில் டிவி, வெட்டி அரட்டைக்கு நேரம் ஒதுக்காதீர்கள்.

சரியாகத் திட்டமிட்டும் வேலையைக் குறித்த நேரத்தில் முடிக்க வில்லையா? அப்படியெனில், என்ன காரணம் என்று அவ்வேலையைத் தொடர்புடைய அலுவலக நண்பரோடு உரையாடுங்கள். உண்மையில், அந்த வேலைக்கான நேரம் குறைவாக உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்தால் மேலதிகாரியிடம் பேசி நேர நீட்டிப்பைப் பெறுங்கள்.

ilayaraja

தொடர்ச்சியாக வேலை செய்துகொண்டே இருந்தாலும் ஸ்ட்ரெஸ் ஏற்படலாம். அதற்காக, உங்களின் வேலை நேர திட்டமிடலில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறு ஓய்வுக்கான நேரத்தை ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் பிடித்த ஒரு பாடலைக் கேட்பது, சின்ன வாக் செல்வது என பிடித்தமான செயல்களில் ஈடுபடுங்கள்.

ஒரு வேலையின்போது மற்றொரு வேலை தரப்பட்டால், மறக்காமல் முதல் வேலைக்கான நேரம் தாமதமாகும் என்பதைச் சொல்லுங்கள். மேலதிகாரி என்ன நினைப்பாரோ என்று தயக்கம் காட்டினால், முதல் வேலையை சரியாகவும் குறித்த நேரத்திலும் முடிக்க முடியாது. அதன்பின் மேலதிகாரியிடம் கெட்ட பெயர் வாங்குவீர்கள். அதற்குப் பதில் தொடக்கத்திலேயே சொல்லிவிடுவது நல்லது.

எவ்வளவுதான் அதிக வேலை இருந்தாலும் குடும்பத்தினருடன் குறிப்பிட்ட நேரம் ஒதுக்குங்கள். இல்லையெனில், உறவுகளிடமிருந்து நீங்கள் விலகி வந்துவிடுவீர்கள். அதனால் ஏற்படும் தனிமை அளிக்கும் ஸ்ட்ரெஸ் மிகக் கொடுமையானது. அப்படியான சூழல் வந்தால் வேலையைக்கூட ஒழுங்காகச் செய்ய முடியாமல் போய்விடும் ஆபத்து இருக்கிறது. எனவே இந்த விஷயத்தைக் கவனத்துடன் கையாளப் பழகுங்கள்.

அலுவலக வேலை நேரம் முடிந்ததும், அது தொடர்பான மெயில், வாட்ஸ்ப் உள்ளிட்ட விஷயங்களிலிருந்தும் வெளியே வந்துவிடுங்கள். இல்லையெனில், அதில் என்ன சொல்கிறார்கள்… என்ன நடக்கிறது என்பனவற்றைப் பார்த்துக்கொண்டே இருப்பதால் ஓய்வு நேரத்திலும் ரிலாக்ஸாக இருக்க முடியாது. மேலும், உறவினர்களுடன் மனம் விட்டு பேசவும் முடியாது. எனவே, வேலை நேரம் முடிந்ததும் மனதளவிலும் வெளியே வாருங்கள்.

யோகா

ஸ்ட்ரெஸ்ஸால் உடல்நலம் கெட வாய்ப்பிருப்பதைப்போல, உடல்நலப் பாதிப்புகளாலும் ஸ்ட்ரெஸ் வர வாய்ப்பிருக்கிறது. எனவே, உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியம். சத்தான உணவுமுறைக்கு உங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். அதேபோல, காலை அல்லது மாலையில் தேவையான உடற்பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்யுங்கள்.

மாவட்ட செய்திகள்

Most Popular

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்

கொரோனா குறித்து ஆய்வு மற்றும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்காகஇன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விராலிமலை பகுதியில் ஜல்லிக்கட்டு சிலையை திறந்து வைத்தார்.

ராஜஸ்தான் vs ஹைதராபாத் – ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை நெருங்க போவது யார்? #SRHvsRR

நேற்றைய ஐபிஎல் போட்டியில் அசத்தலான வெற்றியைப் பெற்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். முகம்மது சிராஜ் ஐபிஎல்லில் புதிய சாதனையைப் பதித்துள்ளார். இன்றைய போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்...

அடுத்த ஆட்சி?- அதிகாரப் பசியில் அத்துமீறும் உபிக்கள்

இன்னும் தேர்தலே நடக்கவில்லை. ஆனால் அதற்குள் ஆட்சிக்கு வந்துவிட்ட மாதிரி கெத்து காட்டுகிறார்கள் சில உபிக்கள். 10 ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லாததால் திமுகவினர் பலரும் ’பசையிழந்து’ போயிருப்பது மறுக்க முடியாத...

“அதிமுக அரசுடன் இணைந்து போராட தயார் என ஸ்டாலின் கூறியது அரசியல் நாடகம்” அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக அரசுடன் இணைந்து போராட தயார் என ஸ்டாலின் கூறியது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை...
Do NOT follow this link or you will be banned from the site!