குறட்டை விடுவதை தவிர்க்க ஈசியான சில டிப்ஸ்

 

குறட்டை விடுவதை தவிர்க்க ஈசியான சில டிப்ஸ்

நம்மில் பலருக்கும் தூங்கும்போது குறட்டை விடும் பழக்கம் இருக்கக்கூடும். இதனால், குறட்டை விடுபவர் பக்கத்தில் தூங்கவே பலரும் தயங்குவார்கள். சிலர் நாசூக்காகச் சொல்லியே காட்டி விடுவார்கள். பொது இடங்களில் தூங்கும்போது தனித்து அடையாளம் காட்டப்படுபவர்.

ஒருவரின் குறட்டை விடும் பழக்கத்திற்கு காரணங்களாகப் பல விஷயங்களைச் சொல்கிறார்கள். நுரையீரலுக்குச் செல்லும் காற்றின் பாதையில் எங்கேனும் இடையூறு வந்தால் குறட்டை வரலாம் என்கிறார்கள். தொண்டையில் சதை வளர்வது, புகைப்பிடிப்பது உள்ளிட்ட காரணங்களும் முன்வைக்கப்படுகின்றன.

குறட்டை விடுவதை தவிர்க்க ஈசியான சில டிப்ஸ்

சிலர் குறட்டை விடுபவர்கள் அசந்து தூங்குகிறார்கள் என்று நினைக்கிறார்கள். அது சரியானது அல்ல. பல்வேறு காரணங்களால்  குறட்டை வரலாம்.

குறட்டை தானே என்று அலட்சியமாக இருக்கக்கூடாது. குறட்டை மட்டுமல்ல உடல்நலப் பிரச்னைகள் சிறிய அளவாக இருக்கும்போதே கவனித்தால் ஈஸியாகக் குணப்படுத்தி விட முடியும். இல்லாவிட்டால் அதற்கேற்ற நேரத்தையும் பணத்தையும் வலியையும் கொடுக்க வேண்டியிருக்கும்.

குறட்டைகளைத் தவிர்க்க சில ஆலோசனைகளைப் பின்பற்றலாம்.

பயோ டெக்னாலஜி தேசிய தகவல் மையம் நடத்திய ஆய்வில் பகல் நேரத்தில் கால்களை அசைத்துக்கொண்டு இருந்தால் இரவில் குறட்டை விடுவது குறையும் என்று தெரிவிக்கிறது. மேலும், நீண்ட நேரம் பகலில் நிற்பவர்களுக்கும் குறட்டை விடுவது குறைகிறது என்கிறது.

குறட்டை விடுவதை தவிர்க்க ஈசியான சில டிப்ஸ்

எந்த நிலையில் தூங்குகிறோம் என்பது முக்கியம். பலர் குப்புறப் படுத்து தூங்குவதை வழக்கமாக்கி கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு அப்படிப் படித்தால்தான் தூக்கமே வரும். அப்படிப்பட்டவர்களுக்குக் குறட்டை சத்தம் வருவதற்கு வாய்ப்பு அதிகம். அதனால், ஒழுங்கான வகையில் படுத்தால் குறட்டையைத் தவிர்க்கலாம்.

வீட்டைச் சுத்தமாக எப்போதும் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், படுக்கும் அறை சுத்தமில்லாமல் தூசியும் குப்பையுமாக இருந்தாலும் குறட்டை வரும் என்கிறார்கள்.

குறட்டை விடுவதை தவிர்க்க ஈசியான சில டிப்ஸ்

புகை மற்றும் போதை பழக்கங்கள் உள்ள பலரும் குறட்டை விடுவதைப் பார்த்திருப்பீர்கள். அதனால், போதை பழக்கத்திற்கு உள்ளாகியிருந்தால் விடுபடுங்கள்.

 தூக்க மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு குறட்டை வரலாம். அதனால், மிக மிகத் தேவையான தருணத்தில் மருத்துவரின் ஆலோசனையோடு மட்டுமே தூக்க மாத்திரையைப் பயன்படுத்துங்கள். நீங்களாகவே தூக்க மாத்திரைகளைச் சாப்பிடும் பழக்கத்திற்கு அடிமையாகி விடாதிர்கள்.

குறட்டை விடுவதை தவிர்க்க ஈசியான சில டிப்ஸ்

தைராய்டு பிரச்னைக்கு மாத்திரை சாப்பிடுபவர் எனில், அதை மருத்துவரின் வழிகாட்டலில் சரியாக எடுத்துக்கொள்ளுங்கள். மாத்திரை தீர்ந்துபோவதற்கு முன்பே வாங்கித் தயாராக வைத்திருங்கள். மருத்துவர் சொன்ன அளவில், சொன்ன தேதி வரை மட்டுமே சாப்பிடுங்கள். நீங்களாகவே மாத்திரை சாப்பிடுவதை நீட்டிக்கவோ குறைக்கவோ கைவிடவோ செய்யாதீர்கள்,

உடல் எடையும்கூட குறட்டை விடுவதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. எனவே உங்களின் உயரத்து ஏற்ற எடையை, உடல்பருமனையும் தக்க வைத்துக்கொள்ளுங்கள். இதனால், குறட்டை விடுவதற்கு மட்டுமல்ல, உடல் பருமன் சார்ந்த பல நோய்களிலிருந்து விடை பெறலாம்.

குறட்டை விடுவதை தவிர்க்க ஈசியான சில டிப்ஸ்

மேற்கூறியவை எல்லாம் கை வைத்தியம் போலத்தான். இவையே தீர்வு என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.  மிக இயல்பான குறட்டைகளையும் தவிர்த்து, அதிக சத்தத்தோடு குறட்டை விடுவது, நீண்ட நாள்கள் குறட்டை விடும் பழக்கம் உள்ளவர்கள், சுவாசிக்க சிரமப்படுபதல் உள்ளிட்ட சிக்கல்கள் இருப்பின் மருத்துவரை விரைந்து அணுகுவதே சரியாக இருக்கும்.

குறட்டை விடுதலை சரிசெய்தல் உங்களுக்கு மட்டுமான சிகிச்சை மட்டுமல்ல… உங்கள் வீட்டில் உள்ளவர்களும் நிம்மதியாகத் தூங்குவதற்கான ஏற்பாடும்கூட. அதனால், உங்களின் குறட்டை விடுதலுக்கான காரணம் என்னவென்று கண்டறிந்து அதற்கு சிசிக்சை எடுத்துக்கொள்ளுங்கள்.