2020 சூரிய கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படும் நேர விபரம் அறிவிப்பு

 

2020 சூரிய கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படும் நேர விபரம் அறிவிப்பு

திருப்பதி: ஜூன் 21-ஆம் தேதி சூரிய கிரகணத்தை முன்னிட்டு அன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படும் நேர விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு இதுவரை 2 சந்திர கிரகணங்களை நாம் பார்த்துள்ளோம். ஜனவரி 10 மற்றும் ஜூன் 5 ஆகிய தேதிகளில் இந்த சந்திர கிரகணங்கள் ஏற்பட்டன. இந்த நிலையில் வருகிற ஜூன் 21 அன்று இந்தாண்டின் முதல் சூரிய கிரகணத்தை பார்க்க உள்ளோம். இந்த சூரிய கிரகணத்தை ஆப்பிரிக்கா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ, எத்தியோப்பியா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உள்ளவர்களால் பார்க்க முடியும்.

2020 சூரிய கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படும் நேர விபரம் அறிவிப்பு

இந்நிலையில், ஜூன் 21-ஆம் தேதி சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அதிகாலை 1 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மூடப்படும் என தேவஸ்தான போர்டு அறிவித்துள்ளது. அன்றைய தினம் காலை 9:15க்கு தொடங்கும் சூரிய கிரகணம் மதியம் 12:10 மணிக்கு உச்சம் பெற்று மாலை 03:04 மணிக்கு முடிவடைகிறது. அதாவது சுமார் 6 மணி நேரம் இந்த சூரிய கிரகண நிகழ்வு நடைபெற உள்ளது.