கீழ்பவானி கிளை வாய்க்காலின் மண் கரை உடைப்பு; விவசாயிகள் வேதனை

 

கீழ்பவானி கிளை வாய்க்காலின் மண் கரை உடைப்பு; விவசாயிகள் வேதனை

தண்ணீரே இல்லாமல் கவலைப்படும் நிலையில், வரும் தண்ணீரும் முறையான பராமரிப்பு இல்லாததால் பொதுப்பணித்துறையின் அலட்சியத்தினால் சாலையில் ஆறு போல் ஓடுவது கண்டு விவசாயிகள் வேதனையை தெரிவித்துள்ளனர்.

கீழ்பவானி கிளை வாய்க்காலின் மண் கரை உடைப்பு; விவசாயிகள் வேதனை

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலுக்கு 2300 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கீழ்பவானி அதன் கிளை வாய்க்கால் மூலம் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. இதையடுத்து பல்வேறு இடங்களில் தற்போது உலவு வேலைகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு ஆனைக்கல் பாளையம் , ரிங் ரோடு அடுத்த லக்காபுரத்தில் உள்ள பெரியார் நகர் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலின் கிளை வாய்க்கால் செல்கிறது. தற்போது தண்ணீர் திறப்பால் இந்த கிளை வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக செல்கிறது. இந்தக் கிளை வாய்க்காலின் மண் கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு அதன் வழியாக ஏராளமான தண்ணீர் சாலையோரமாக ஆறு போல் ஓடி வீணாக செல்கிறது.

கீழ்பவானி கிளை வாய்க்காலின் மண் கரை உடைப்பு; விவசாயிகள் வேதனை

இதனால் இந்தப் பகுதியை வாகன ஓட்டிகள் கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தண்ணீர் சிக்கனமாக செலவழித்து வரும் நிலையில் இது போன்று தண்ணீர் வீணாக செல்வதால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

பொதுப்பணித் துறையினர் உடனடியாக கரை உடைப்பை சரி செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.