பிரபல கொள்ளையனை போலீசில் சிக்க வைத்த ‘சமூக இடைவெளி’ தடுப்பு!

 

பிரபல கொள்ளையனை  போலீசில் சிக்க வைத்த ‘சமூக இடைவெளி’ தடுப்பு!

’’தலைவலிக்கு மாத்திரை வேணும்னு கேட்டு, அந்த மெடிக்கலுக்கு போனேன். அப்ப, அந்த மெடிக்கல் ஓனர், பணத்தை எண்ணி கல்லா பெட்டிக்குள்ள வைக்குறத பார்த்தேன். அத எப்படியாவது அடிச்சுடலாம்னுதான் ராத்திரி வந்து பூட்டை உடைச்சு உள்ளே போனேன். பணத்தை எடுத்துட்டு வெளியே வர்றதுக்குள்ள நீங்க வந்தூட்டீங்க சார்’’

  • இது பிடிபட்ட கொள்ளையன் நிலக்கோட்டை போலீசாரிடம் சொன்னது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சூப்பர் மெடிக்கல் திறந்துகிடக்கிறது என்று நள்ளிரவில் போலீசுக்கு தகவல் வர, உடனே அங்கு சென்று பார்த்தபோதுதான், கொள்ளையன் லட்சுமணன் சிக்கினான். மெடிக்கலில் கொள்ளையடிக்க ஏன் திட்டமிட்டாய் என்று அவனிடம் போலீசார் விசாரித்தபோதுதான் மேற்கொண்டவாறு சொல்லியிருக்கிறான்.

பிரபல கொள்ளையனை  போலீசில் சிக்க வைத்த ‘சமூக இடைவெளி’ தடுப்பு!

மேலும் லட்சுமணனிடம் விசாரித்ததில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவன் என்று தெரியவந்தது. தமிழகம் முழுவதும் இவன் மீது 53 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்பததும், ஐந்த நாட்களுக்கு முன்னர்தான் சிறையில் இருந்து விடுதலையாகி இருக்கிறான் என்பதையூம் அறிந்ததும் அதிர்ந்தனர்.

லட்சுமணன் போலீசில் சிக்கியதே ஒரு சுவாரஷ்யம்தான். கொரோனா பரவல் தடுப்பின் காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றச்சொல்லி, ஒவ்வொரு கடையிலும் சவுக்கு, மூங்கில் கம்புகள் கொண்டு கட்டப்பட்டுள்ளன.

தப்போயோடும் போது, மெடிக்கல் முன் இருந்த அந்த சமூக இடைவெளி தடுப்பில் மோதி கீழே விழுந்துதான் போலீசில் பிடிபட்டிருக்கிறான் லட்சுமணன்.