மொட்டை போடும் பக்தர்கள் -ஆட்டைய போடும் கடத்தல்காரர்கள் -120 மூட்டைகளில் பிடிபட்ட திருப்பதி சமாச்சாரம்.

மொட்டை போடும் பக்தர்கள் -ஆட்டைய போடும் கடத்தல்காரர்கள் -120 மூட்டைகளில் பிடிபட்ட திருப்பதி சமாச்சாரம்.

திருப்பதியிலிருந்து கடத்தப்பட்ட 2 கோடி மதிப்புள்ள தலைமுடியை போலீசார் கைப்பற்றினார்கள் .

மொட்டை போடும் பக்தர்கள் -ஆட்டைய போடும் கடத்தல்காரர்கள் -120 மூட்டைகளில் பிடிபட்ட திருப்பதி சமாச்சாரம்.

உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் மற்றும் பக்தர்கள் ஆந்திராவின் திருமலை ஆலயத்திற்கு வருகை தந்து வெங்கடேஸ்வரருக்கு பக்தியின் அடையாளமாக தங்கள் தலைமுடியை வழங்குகிறார்கள்.
பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்படும் இந்த தலைமுடி, சர்வதேச ஏலதாரர்களுக்கு ஏலம் விட்டு விற்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தான போர்டு தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், சில ஏலதாரர்கள் இந்த தலைமுடியை வாங்கி பின்னர் சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு கொண்டு செல்கிறார்கள் .
அதன்படி இந்தியா-மியான்மர் எல்லையில் ரூ .2 கோடி மதிப்புள்ள கடத்தப்பட்ட முடியை அசாம் ரைபிள்ஸ் குழு பறிமுதல் செய்தது
அஸ்ஸாம் ரைபிள்ஸ் என்ற 23 பிரிவின் செர்ச்சிப் பட்டாலியன் இந்த முடி கடத்தல்காரர்களைப் பிடித்து,அவர்களிடமிருந்து 120 மூட்டை மனித தலை முடியை பறிமுதல் செய்துள்ளது. இந்த பறிமுதல் மிசோரம் எல்லையிலிருந்து செய்யப்பட்டது.கடத்தல்காரர்கள் தலைமுடியை மியான்மருக்கு கொண்டு சென்று ,பின்னர் தாய்லாந்திற்கும் இறுதியில் சீனாவுக்கும் கொண்டு செல்கிறார்கள் .
திருமலை திருப்பதியில் இருந்து வெளிநாடுகளுக்கு மனித முடிகளை சட்டவிரோதமாக கடத்தியதாக ஆளும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி மீது தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.பி) செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டியது.
“ரூ .2 கோடி மதிப்புள்ள பக்தர்களின் தலைமுடி பறிமுதல் செய்தது , சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது .. இதிலிருந்து, மணல், சிமென்ட், மதுபானம் தவிர மனித தலைமுடியைக் கூட ஒய்.சி.பி தலைவர்கள் கடத்துகிறார்கள் என்பது தெளிவாகிறது” என்று முன்னாள் அமைச்சரும் டி.டி.பி. மூத்த தலைவர் அய்யன்னா பத்ருது கூறினார் .

மொட்டை போடும் பக்தர்கள் -ஆட்டைய போடும் கடத்தல்காரர்கள் -120 மூட்டைகளில் பிடிபட்ட திருப்பதி சமாச்சாரம்.