ரூ.4,000 த்துக்கு ஸ்மார்ட் போன் – ஜியோ திட்டம்!

 

ரூ.4,000 த்துக்கு ஸ்மார்ட் போன் – ஜியோ திட்டம்!

வரும் 2021ம் ஆண்டு தொடக்கத்தில் 4 ஆயிரம் ரூபாயில் 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த ஜியோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரூ.4,000 த்துக்கு ஸ்மார்ட் போன் – ஜியோ திட்டம்!
ரூ.4,000 த்துக்கு ஸ்மார்ட் போன் – ஜியோ திட்டம்!

முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் பேசும்போது, அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து குறைந்த விலை ஆண்டிராய்ட் ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இந்த போன் நடப்பாண்டு இறுதியிலோ அல்லது வரும் 2021ம் ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

ரூ.4,000 த்துக்கு ஸ்மார்ட் போன் – ஜியோ திட்டம்!

இந்த போன் ஆண்டிராய்ட் 10 இயங்குதளம், எச்டி திரை, ஸ்நாப்டிராகன் க்யூ எம் 215 எஸ்ஒசி சிப்செட் பொருத்தப்பட்டது என்றும், இதன் விலை 4 ஆயிரம் என்றளவில் இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் குறைந்த விலை 5 ஜி போன் ஒன்றையும் அறிமுகப்படுத்த ஜியோ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்