”ஸ்மார்ட் 4 ஃபோன் – இன்ஃபினிக்ஸ் அறிமுகம்!

 

”ஸ்மார்ட் 4 ஃபோன் – இன்ஃபினிக்ஸ் அறிமுகம்!

இன்பினிக்ஸ் நிறுவனம் ஸ்மார்ட் 4 என்ற பட்ஜெட் ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தி உள்ளது.

”ஸ்மார்ட் 4 ஃபோன் – இன்ஃபினிக்ஸ் அறிமுகம்!

ஆண்டிராய்ட் 10 இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் 6.82 இன்ச் எச்டி பிளஸ் திரை, 2ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி, மைக்ரோ எஸ்டி கார்ட் இணைத்துக்கொள்ளும் வசதி, மீடியா டெக் ஹீலியோ ஏ22 பிராசசருடன் கிடைக்கிறது. மேலும் 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜருடன் வந்துள்ளது.

”ஸ்மார்ட் 4 ஃபோன் – இன்ஃபினிக்ஸ் அறிமுகம்!

கேமராவை பொறுத்தவரை பின்புறம் 13 மெகா பிக்சல் கேமரா மற்றும் டெப்த் சென்சார் என இரண்டு கேமரா செட்டப்பும், முன்புறத்தில் 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவும் கொண்டு அறிமுகமாகி உள்ளது. மின்நைட் பிளாக், ஒஷன் வேவ், சியான் மற்றும் வயலெட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

”ஸ்மார்ட் 4 ஃபோன் – இன்ஃபினிக்ஸ் அறிமுகம்!

தீபாவளியை முன்னிட்டு பட்ஜெட் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த ஸ்மார்ட் 4 ஃபோனை இன்ஃபினிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த போன் பிளிப்கார்டில் 6999 ரூபாய்க்கு கிடைக்கிறது.

  • எஸ். முத்துக்குமார்