தெலுங்கானாவில் கிராம மக்களை தாக்கிய கரடி அடித்துக் கொலை !!

 

தெலுங்கானாவில் கிராம மக்களை தாக்கிய கரடி அடித்துக் கொலை !!

தெலுங்கானாவின் கமரெட்டி மாவட்டம் கண்ணப்பூர் கிராமத்தில் இரண்டு பேரை சாம்பல் கரடி கடித்ததால் ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் அந்த கரடியை அடித்து கொன்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று கண்ணப்பூர் கிராமத்திற்குள் நுழைந்த சாம்பல் நிறக் கரடியை கிராமவாசிகளின் கொம்புகள் மற்றும் கற்பாறைகளால் அடித்து கொன்றுள்ளனர். கிராமத்திற்குள் நுழைந்த பின்னர் விலங்கு 2 பேரை காயப்படுத்தியதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வனத்துறை தெரிவித்த தகவலில், கரடி பயம் காரணமாக கிராமவாசிகளில் பெரும்பாலோர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டனர். அதே நேரத்தில் அந்த இடத்தை விட்டு வெளியேற முடியாத இரண்டு பேர் கரடியால் தாக்கப்பட்டனர். இதையடுத்து கரடியை பிடிக்க வன அதிகாரிகள் அங்கு சென்றனர். ஆனால் அங்கு செல்வதற்குள், பீதியடைந்த கிராமவாசிகள் கரடியைத் துரத்திச் சென்று கற்பாறைகளால் கொடூரமாக தாக்கினர். இதனால் காயம் ஏற்பட்ட கரடி இறந்து போனது. இதையடுத்து கரடியை கொன்றதாக 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் கிராம மக்களை தாக்கிய கரடி அடித்துக் கொலை !!
இதேபோல மற்றொரு சம்பவத்தில், உத்தரபிரதேசத்தின் காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மக்களை தாக்கிய சிறுத்தையை கிராமவாசிகள் தாக்கினர். இதனால் அது கோதுமை வயலுக்குள சென்று மறைந்துவிட்டது. வயல்வெளியில் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் வந்து சிறுத்தையை சுற்றி வளைத்தனர். வன அதிகாரிகளும் தகவல் பெற்ற பின்னர் அந்த இடத்திற்கு வந்தனர்.
அந்த சிறுத்தையை மீட்க உதவி செய்யுமாறு பலமுறை கிராம மக்களை வனத்துறை கேட்டனர். ஆனால் மக்கள் கேட்க மறுத்துவிட்டனர். பின்னர், அந்த சிறுத்தையை கொடூரமாக கொன்றனர்.