SK 15: பூஜையுடன் தொடங்கியது சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படம் 

 

SK 15: பூஜையுடன் தொடங்கியது சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படம் 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள sk15 திரைப்படத்திற்கு ஹீரோ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள SK15 திரைப்படத்திற்கு ஹீரோ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘Mr.லோக்கல்’ திரைப்படம் வரும் மே 1ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து தற்போது இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் நடித்து வருகிறார். 

அதைத்தொடர்ந்து பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படம் SK 15. இதில் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் நாச்சியார் படத்தில் நடித்த இவானா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். 

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் SK15 படத்திற்கு ஹீரோ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதைத்தொடர்ந்து பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருப்போரூர் எஸ்.எஸ்.என் கல்லூரியில் தொடர்ந்து 10 நாள் படமாக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.