மெல்பேர்னில் மீண்டும் ஆறு வார ஊரடங்கு! – கொரோனாவைக் கட்டுப்படுத்த அதிரடி

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் கொரோனா வேகமாக பரவி வருவதைத் தொடர்ந்து மீண்டும் ஆறு வாரங்களுக்கு நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
ஆஸ்திரேலியாவில் தற்போது கொரோனா தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவைக் கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கு கொண்டு வர வேண்டும் என்று சுகாதாரப் பணியாளர்கள் கூறிவந்தனர்.


இந்த நிலையில் மெல்பேர்ன் நகரில் நாளை முதல் ஆறு வாரங்களுக்கு ஊரடங்கு அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விக்டோரியா மாகாணத்தின் ப்ரீமியர் டேனியல் ஆண்ட்ரூ கூறுகையில், “புதன்கிழமை நள்ளிரவு முதல் மெல்பேர்ன் மெட்ரோபாலிடன் பகுதியில் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட, அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் வெளியே வரலாம். கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது” என்று கூறியுள்ளார்.


விக்டோரியா மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் 191 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் மெல்பேர்ன் நகரத்தை சேர்ந்தவர்கள். எனவே, சமூக பரவல் என்ற நிலைக்கு கொரோனா செல்வதைத் தடுக்க ஆறு வார ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
விக்டோரியா மாகாணத்தில் கொரோனாத் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து வடக்கு மாநிலமான நியூ சவுத் வேல்ஸ் தன்னுடைய மாகாண எல்லையை மூடியது. 1919ம் ஆண்டு ஸ்பானிஷ் ஃபுளு பரவிய நேரத்தில் இரண்டு மாநில எல்லைகளும் கடைசியாக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Most Popular

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி லாபம் ஈட்ட முயன்ற பதஞ்சலிக்கு ரூ.10 லட்சம் அபராதம்

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை...

’இந்த லிஸ்ட்டில் நானா?’ கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் ஆச்சரியம் – டாப்ஸி பெருமை!

ஆண்கள் மட்டுமே கோலோச்சிய வந்த கிரிக்கெட் உலகத்தில் ஒரு பெண் சட்டென்று எல்லோரின் பார்வையையும் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் மிதாலி ராஜ். ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் எப்படி கருதப்பட்டரோ அதற்கு...

கொரோனா காரணமாக நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க கோரி மனு!

நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதம் நடைபெறவிருந்த நீட் தேர்வு ஜூலை 26-ஆம் தேதிக்கு...

“வாஷிங் மெஷின் போல ஏடிஎம் மெஷினை அடிக்கடி தூக்கி செல்லும் கூட்டம் ” -இந்நிலை நீடித்தால் இனி ஏடிஎம் மெஷின்ல காசுக்கு பதில் காத்துதான் வரும்.

தென்மேற்கு டெல்லியில் உள்ள ராஜோக்ரி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஒரு ஏடிஎம் மெஷினை அடையாளம் தெரியாத இருவர் தூக்கி சென்றனர் .அந்த மெஷினில் மொத்தம் 18 லட்ச ரூபாய் பணம்...