தவறான கொரோனா பரிசோதனை : பிறந்து 6 நாட்களே ஆன குழந்தை பரிதாப பலி!

 

தவறான கொரோனா பரிசோதனை : பிறந்து 6 நாட்களே ஆன குழந்தை பரிதாப பலி!

கர்நாடக மாநிலம் தாவங்கரே சிகாடேரி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அந்த கர்ப்பிணிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு சுகப் பிரசவத்தில் குழந்தை பிறந்தது.

தவறான கொரோனா பரிசோதனை : பிறந்து 6 நாட்களே ஆன குழந்தை பரிதாப பலி!

கொரனோ பரிசோதனை முடிவுகள் வெளியானதில் அந்த கர்ப்பிணிக்கு நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் குழந்தையை தாயிடம் கொடுக்காமல் ஐசியு-விற்கு மாற்றினர். மேலும் அந்தப் பெண்ணிற்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. காரணம் அந்தப் பெண் எந்த ஒரு கட்டுப்பாடும் மண்டலத்தையும் சேர்ந்தவர் அல்ல. மேலும் கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்தவரும் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்குக் கொரோனா இல்லை என முடிவு வந்தது.

தவறான கொரோனா பரிசோதனை : பிறந்து 6 நாட்களே ஆன குழந்தை பரிதாப பலி!

இதையடுத்து கடுமையான சுவாசப் பிரச்சனை காரணமாக பிறந்து 6 நாட்கள் ஆன அவரின் குழந்தை உயிரிழந்தது. இது குறித்து கூறியுள்ள குழந்தையின் தந்தை, ‘ தவறான பரிசோதனை முடிவின் காரணமாக தாய் தனது குழந்தையை பார்க்க கூட முடியாத நிலை ஏற்பட்டது. குழந்தைக்குக் குடலில் தொற்று ஏற்பட்டு சுவாசப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில் பரிதாபமாக இறந்து விட்டது. குழந்தையின் உடலை நாங்கள் ஒரு நாள் போராட்டத்திற்கு பிறகு தான் கையில் வாங்கினோம்’ என்று சோகத்துடன் கூறியுள்ளார்.