மூன்று போக்சோ வழக்குகளில் நீதிமன்ற காவல் முடிவடைந்தது-சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாள் சிறை

 

மூன்று போக்சோ வழக்குகளில் நீதிமன்ற காவல் முடிவடைந்தது-சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாள் சிறை

பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் அவரை மேலும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மூன்று போக்சோ வழக்குகளில் நீதிமன்ற காவல் முடிவடைந்தது-சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாள் சிறை

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் டெல்லியில் பங்கியிருந்த அவரை கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி அன்று சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட அவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டார். இதுவரைக்கும் சிவசங்கர் பாபா மீது மூன்று போக்சோ சட்டம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கைதுக்குப் பின்னர் இரண்டு முறை தனக்கு நெஞ்சுவலி வந்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து சிவசங்கர் பாபாவிற்கு ஜாமீன் வேண்டும் என்று அவரது தரப்பில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் சிவசங்கர் பாபா வின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

கடந்த 14ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 40 சாட்சியங்களின் அடிப்படையில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதில், ஆசிரியர் பாரதி சீனிவாசன், நடன ஆசிரியர் சுஷ்மிதா , தீபா ஆகிய 3 பேரும் இடம்பெற்றிருக்கின்றனர்.

தான் ஆண்மை இல்லாத நபர் என்றும் அப்படி இருக்கும்போது தான் இப்படி பாலியல் தொந்தரவுகளில் ஈடுபடமுடியும் என்று சிவசங்கர் பாபா வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த காரணத்தை சொல்லி அவர் ஜாமீன் கேட்டிருந்தார் ஆனாலும் அவருக்கு பிள்ளைகள் இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி ஜாமீன் தர மறுத்து வந்தார் .


இந்நிலையில் வெளி நாட்டைச் சேர்ந்த மாணவி கொடுத்த புகாரின் பேரில் சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பெங்களூரைச் சேர்ந்த பள்ளி மாணவியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் புழல் சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவல் முடிவடைய இருப்பதால் அவரை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி அம்பிகா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். 3 போக்சோ வழக்குகளில் நீதிமன்ற காவல் முடிவடைந்ததால் அவரை மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.