’’திரும்ப திரும்ப வர்றான்;ஒத்துப்போகலைன்னா….’’ 100 பெண்களுக்கு டார்ச்சர் கொடுத்த சிவகங்கை இளைஞர்

’’எத்தனை முறை திட்டினாலும் திரும்ப திரும்ப லைனில் வர்றான். அவன் யாரென்றே எனக்கு தெரியாது. ஆபாசமாக பேசுகிறான். அவன் ஆசைக்கு ஒத்துப்போகலைன்னா கொலை செஞ்சுடுவேன்னு மிரட்டுறான்’’என்று புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசிடம் ஒரு பெண் கண்ணீர் வடித்திருக்கிறார்.

அப்பெண்ணின் புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அந்த நபரை பிடிக்க திட்டமிட்டனர் கணேஷ்நகர் போலீசார். பெண்ணுக்கு வந்த செல்போன் நம்பர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கு சொந்தமானது என்பதால் அவரை போலீசார் வளைத்து பிடித்னர். ஆனால், அந்த சிம் தன்னிடம் இல்லை என்றும், நண்பனுக்காக வாங்கிக்கொடுத்தேன் நெற்குப்பையை சேர்ந்த கார்த்திகேயன்(37) அடையாளம் காட்டியிருக்கிறார்.

’’திரும்ப திரும்ப வர்றான்;ஒத்துப்போகலைன்னா….’’ 100 பெண்களுக்கு டார்ச்சர் கொடுத்த சிவகங்கை இளைஞர்

கார்த்திகேயனிடம் விசாரிக்கையில், அந்த நபர்தான் புதுக்கோட்டை பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்தது தெரியவந்தது. மேலும், புதுக்கோட்டை, சிவகங்கையில் கல்லூரி மாணவிகள், குடும்ப பெண்கள் என்று 100க்கும் மேற்பட்டோருக்கு இது போன்று டார்ச்சர் கொடுத்து வந்துள்ளது தெரியவந்திருக்கிறது. கல்லூரி மாணவிகள்தான் கார்த்திகேயனால் அதிகம் டார்ச்சருக்கு உள்ளாகியிருப்பதும் தெரியாந்துள்ளது. வீட்டுக்கும், சமூகத்திற்கும் பயந்து அவர்கள் போலீசில் புகார் கொடுக்காமல் இருந்திருக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

ஏழு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.