அண்ணனை பிறப்புறுப்பில் எட்டி உதைத்து கொன்ற தம்பி : அதிர வைக்கும் காரணம்!

நல்லதம்பி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கீழப்பூங்குடி பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி. 60 வயதான இவருக்கு பூமிநாதன் என்ற தம்பி உள்ளார். இவர்கள் இருவரும் தீராப் பகையோடு இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி அண்ணன் நல்லதம்பி ஓடு பிரிக்கும் போது மயங்கி விழுந்துள்ளார். செம்மனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அங்கிருந்தவர்கள் தூக்கிச் செல்ல அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நல்லதம்பி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது . ஆனால் நல்லதம்பியின் மகனோ எனது தந்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் நல்ல தம்பியின் பிறப்புறுப்பில் அடிபட்டு அவர் உயிர் நிறைந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தம்பி பூமி நாதனிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.

Murder

கடந்த 25 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் பேசாமல் பகையோடு இருந்து வந்த நல்லதம்பி மற்றும் பூமிநாதன் சகோதரர்கள் ஒரே மாதிரியான வீட்டை கட்டி நடுவில் தடுப்பு சுவர் வைத்து வாழ்ந்து வந்துள்ளனர். சமீபத்தில் இவர்களுக்குள் சொத்து பிரிவினை நடந்துள்ளது. இதில் நல்லதம்பி புதிதாக கட்டிய பூர்வீக வீட்டின் ஒரு பகுதி அவரது தம்பி பூமி நாதனுக்கு சென்றது. அதற்கு பதிலாக அவர் 40 ஆயிரம் ரூபாய் நல்லதம்பியிடம் கொடுக்க வேண்டும் என்று பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டது. ஒருவேளை பூமிநாதன் 40,000 ரூபாய் தரத் தவறினால் அவர் வீட்டில் உள்ள மரங்கள், ஓடுகளை நல்லதம்பி எடுத்துக் கொள்ளலாம் என பஞ்சாயத்தில் கூறப்பட்டது. அதன்படி பூமிநாதன் 40 ஆயிரம் ரூபாயை தர மறுத்ததால் சம்பவத்தன்று நல்லதம்பி தனது ஆட்களை வரவழைத்து ஓடுகளை பிரித்து எடுத்துள்ளார். அப்போது அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட தகராறில் பூமிநாதன் நல்லதம்பியின் பிறப்புறுப்பில் எட்டி உதைத்துள்ளார் இதனால் நல்லதம்பி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

இதனால் சந்தேகம் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் அண்ணனை கொன்ற தம்பி பூமிநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

முன்னதாக சேலம் மாவட்டத்தில் நில பிரச்சனையில் அண்ணனை அவரது தம்பி எப்எம் ரேடியோவில் வெடிகுண்டு வைத்து கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

Most Popular

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் மதிப்பும், மரியாதையும் கூடும்!

இன்றைய ராசிபலன்கள் 06-07-2020  (திங்கட்கிழமை) நல்லநேரம் காலை 6.15 முதல் 7.15 வரை மாலை 4.45 முதல் 5.45 வரை ராகுகாலம் காலை 7.30 முதல் 9 வரை எமகண்டம் காலை 10.30 முதல் 12 வரை மேஷம் பணவரவு அதிகரிக்கும். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆதரவும்...

அடுத்தடுத்து திருப்பங்கள். பா.ஜ.க. தலைவர் நட்டாவை சந்திக்கும் சச்சின் பைலட்…பெரும்பான்மையை இழக்கும் காங்கிரஸ்

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட நாட்களாக மன கசப்பு இருந்து வந்தது. தற்போது...

மத்திய பிரதேசத்தில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்… காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரதியுமான் லோதி பா.ஜ.க.வில் ஐக்கியம்..

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நேரம் சரியில்லை என்றே தெரிகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த உட்கட்சி சண்டையால், 18 ஆண்டுகளாக அந்த கட்சியின் தீவிர விசுவாசியாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா அந்த கட்சியிலிருந்து...

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. எம்.பி., எம்.எல்.ஏ. மீது டி.எம்.சி. குண்டர்கள் தாக்குதல்… பா.ஜ.க. எம்.பி. சவுமித்ரா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். தொடர்ந்து...
Open

ttn

Close