சிவகங்கை: ஊராட்சித் தலைவர் – பெண் வி.ஏ.ஓ சந்தித்துக்கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்!

 

சிவகங்கை: ஊராட்சித் தலைவர் – பெண் வி.ஏ.ஓ சந்தித்துக்கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்!

சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சித் தலைவரும், பெண் வி.ஏ.ஓ-வும் தனிமையில் இருந்ததால் தாக்கப்பட்டார்கள் என்று கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஊர் மக்களுடன் ஊராட்சித் தலைவர் வி.ஏ.ஓ வீட்டுக்குச் சென்றார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக வி.ஏ.ஓ-வின் கணவர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் கண்ணன். இவர் பெண் வி.ஏ.ஓ-வுடன் தனிமையில் இருந்ததாகவும் இதனால் கிராம மக்கள் சேர்ந்து தாக்கியதாகவும் செய்தி வெளியானது.

சிவகங்கை: ஊராட்சித் தலைவர் – பெண் வி.ஏ.ஓ சந்தித்துக்கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்!
இந்த நிலையில் இந்த செய்தியை கண்ணன் மறுத்துள்ளார். பெண் வி.ஏ.ஓ-வுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டு இருந்தது. அதனால் அவருக்கு பிரிவு உபசார விழாவுக்காக மதகுபட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு ஊர் மக்களுடன் சென்றாராம். அப்போது, வி.ஏ.ஓ-வின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் 10க்கும் மேற்பட்டோர் சேர்ந்து வி.ஏ.ஓ மற்றும் ஊராட்சித் தலைவரைத் தாக்கியுள்ளனர்.
இந்த தகவல் அறிந்த சொக்கநாதபுரும் கிராம மக்கள் சொக்கநாதபுரம் – கல்லல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஊராட்சித் தலைவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டுள்ளது.

சிவகங்கை: ஊராட்சித் தலைவர் – பெண் வி.ஏ.ஓ சந்தித்துக்கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்!இந்த சம்பவம் தொடர்பாக வி.ஏ.ஓ சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தனக்கும் தன்னுடைய கணவருக்கும் ஐந்து ஆண்டுகளாக தொடர்பு இல்லை என்றும், கருத்து வேறுபாடு காரணமாக ஐந்து ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாகவும், விவாகரத்து வழக்கு நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். குடும்ப பிரச்னையை மனதில் வைத்து தன்னை அவமானப்படுத்தவும் வீட்டை அபகரிக்கவும் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலில் கண்ணனின் வீட்டுக்கு பெண் வி.ஏ.ஓ வந்ததாகவும், அவர்களை கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் கையும் களவுமாக பிடித்ததாகவும் செய்தி வெளியானது. தற்போது பெண் வி.ஏ.ஓ வீட்டுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் சென்றதாக புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.