“ஆன்மீக அரசியலை முன்னிறுத்தி, 234 தொகுதிகளில் தனித்து போட்டி” – அர்ஜுன் சம்பத் அறிவிப்பு

“ஆன்மீக அரசியலை முன்னிறுத்தி, 234 தொகுதிகளில் தனித்து போட்டி” – அர்ஜுன் சம்பத் அறிவிப்பு

கோவை

ஆன்மீக அரசியலை முன்னிறுத்தி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என்றும் அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

கோவையில் தனியார் அரங்கில் நடந்த அந்த கட்சியின் ஜோதிடர் அணி பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட அர்ஜுன் சம்பத், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்தாலும், அவர் ஆன்மீக அரசியல் கொள்கையை, திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக விட்டுச் சென்றிருக்கிறார் என்று கூறினார். அந்த ஆன்மீக அரசியலை முன்னிறுத்தி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என்று அவர் அறிவித்தார்.

“ஆன்மீக அரசியலை முன்னிறுத்தி, 234 தொகுதிகளில் தனித்து போட்டி” – அர்ஜுன் சம்பத் அறிவிப்பு

ஏற்கனவே ரஜினியின் நண்பராக இருக்க கூடிய மு.க.அழகிரி, தங்களது ஆன்மீக அரசியலுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் அர்ஜுன் சம்பத் கேட்டுகொண்டார். தொடர்ந்து பேசிய அவர், பொங்கல் பண்டிகையை தேவாலயங்களில் கொண்டாடி அதை கிறிஸ்தவ மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும்,வலியுறுத்தினார்.