’வானதி மேடம்…பாலியல் குற்றம் சாட்டப்பட்டவரை நிகழ்ச்சிக்கு அழைக்காதீர்கள்?’ சின்மயி சர்ச்சை ட்விட்  

 

’வானதி மேடம்…பாலியல் குற்றம் சாட்டப்பட்டவரை நிகழ்ச்சிக்கு அழைக்காதீர்கள்?’ சின்மயி சர்ச்சை ட்விட்   

புதிய கல்விக் கொள்கையின் வரைவு சென்ற ஆண்டு இஸ்ரோ கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு மத்திய அரசிடம் அளித்தது. அதற்கு நாடு முழுக்க ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை சில நாள்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது. அதனால் புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் அம்சங்கள் பற்றி மீண்டும் விவாதம் தொடங்கிவிட்டது.

’வானதி மேடம்…பாலியல் குற்றம் சாட்டப்பட்டவரை நிகழ்ச்சிக்கு அழைக்காதீர்கள்?’ சின்மயி சர்ச்சை ட்விட்   

தமிழ்நாட்டில் தொலைக்காட்சி விவாதங்களில் இரண்டு நாள்களாக இக்கொள்கை பற்றிய விவாதமே சூடு பறந்தது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி சார்ப்பில் புதியக் கல்விக் கொள்கை திட்டத்தின் சிறப்பு அம்சங்களைக் குறித்து விளக்க இணைய வழியிலான கூட்டம் ஒன்று ஒருங்கிணைப்பட்டுள்ளது. அதில் சிறப்பு அழைப்பாளராக ரமேஷ் பிரபா கலந்துகொள்கிறார். இதற்கான விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன.

’வானதி மேடம்…பாலியல் குற்றம் சாட்டப்பட்டவரை நிகழ்ச்சிக்கு அழைக்காதீர்கள்?’ சின்மயி சர்ச்சை ட்விட்   

பாடகி சின்மயி, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ரமேஷ் பிரபா பற்றிய கேள்வியை எழுப்பியுள்ளார்.

மரியாதைக்கு உரிய வானதி மேடம், திரு ரமேஷ் பிரபா 18 வயது நிரம்பாத ஒருவரை பாலியல் வன்முறை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர். அந்த விசாரணை முடியும் வரை அவருடன் இதுபோல இணைந்து நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்’

என்று பதிவிட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான வானதி ஸ்ரீனிவாசனையும் டேக் செய்துள்ளார் சின்மயி.

பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது மீடூ புகார் அளித்தார். அத்தோடு பலரும் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை மீடு புகாராக அளித்தனர். அதுபோல, ஒரு பெண் 2018 ஆம் ஆண்டு சின்மயிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில், ‘அப்போது 13 வயது இருக்கும். தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக சென்றபோது ரமேஷ் பிரபா தொடக்கூடாத இடத்தில் தொட்டதாகவும் முத்தம் கொடுக்க முயற்சி செய்ததாகவும்’ அக்கடிதத்தில் எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்தை சின்மயி தற்போது எடுத்தும் மீள் பதிவிட்டுள்ளார்.