தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன!

 

தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் ஒரேமாதிரியான ஊரடங்கை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார். இன்று காலை 6மணி உடன் ஊரடங்கு முடிவடைந்த நிலையில் நோய்த்தொற்று வெகுவாக குறைந்த போதிலும் நோய்த்தொற்று பரவலை கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் வருகின்ற 12-ஆம் தேதி முதல் காலை 6 மணி வரை தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
இதில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன!

நோய் கட்டுப்பாடு பகுதிகள் தவிர அனைத்து பகுதிகளிலும் ஏற்கனவே வழங்க அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். ஏற்கனவே இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன!

அத்துடன் மாநிலங்களுக்கு இடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து, சர்வதேச விமான போக்குவரத்து, திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், சமுதாய மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு கலாச்சார நிகழ்வுகள் ,பள்ளி மற்றும் கல்லூரிகள் ,உயிரியல் பூங்கா உள்ளிட்டவை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மாவட்டங்களிடையே போக்குவரத்து , மாவட்டங்களுக்குள் போக்குவரத்து, உணவகங்கள், விடுதிகள் ,அடுமனைகளில் தங்கவும் , உணவகங்களில் அமர்ந்து சாப்பிட 50 %வாடிக்கையாளர்களுக்கு அனுமதி அளித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.