மலைப்பகுதிகளில் சிக்னல் கிடைக்க நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

மலைப்பகுதிகளில் சிக்னல் கிடைக்க நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழக மலைப்பகுதிகளில் 52 இடங்களில் ஆன்லைன் வகுப்பிற்கான சிக்னல் சரிவர கிடைக்கவில்லை என்றும், விரைவில் சரிசெய்யப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மலைப்பகுதிகளில் சிக்னல் கிடைக்க நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சூழ்நிலைகள் மாறினால் மட்டுமே, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என கூறினார். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதற்கு ஏற்ப கூடுதல் பாடப்புத்தகங்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மலைப்பகுதிகளில் சிக்னல் கிடைக்க நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஆன்லைன் வகுப்பு பயிலும் மலைப்பகுதி மாணவர்களின் வசதி குறித்து ஆய்வு செய்ததில், 52 இடங்களில் சிக்னல் கிடைக்கவில்லை என தெரிய வந்துள்ளது. அவற்றை சரிசெய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை கருப்பண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.