கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க பா.ஜ.க. அரசாங்கத்தின் திறமையின்மை, ஊழல்தான் காரணம்

 

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க பா.ஜ.க. அரசாங்கத்தின் திறமையின்மை, ஊழல்தான் காரணம்

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க பா.ஜ.க அரசாங்கத்தின் திறமையின்மை, ஊழல் மற்றும் பொய்கள்தான் காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பாக தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக கர்நாடகாவில் கொரோன வைரஸ் மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. அம்மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் புதிதாக 2,566 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் கொரோனாவுக்கு 19 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கு பா.ஜ.க. அரசை கைகாட்டுகிறது காங்கிரஸ்.

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க பா.ஜ.க. அரசாங்கத்தின் திறமையின்மை, ஊழல்தான் காரணம்
பி.எஸ். எடியூரப்பா

கர்நாடக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா இது தொடர்பாக டிவிட்டரில், பா.ஜ.க. அரசாங்கத்தின் திறமையின்மை, ஊழல் மற்றும் பொய்கள் ஆகியவைதான் கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க காரணங்கள். வெட்கமற்ற கர்நாடக பா.ஜ.க. அரசாங்கத்தின் தவறுகளால் கர்நாடக மக்கள் நெருக்கடியை சந்திக்கின்றனர்.

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க பா.ஜ.க. அரசாங்கத்தின் திறமையின்மை, ஊழல்தான் காரணம்
கொரோனா வைரஸ் பாதித்த நோயாளி (கோப்புப்படம்)

கர்நாடக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல சேவைகள் துறை அறிக்கையின்படி 2020 டிசம்பர் வரை கொரோனாவால் 12,090 பேர் இறந்துள்ளனர். திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறை அறிக்கையின்படி கடந்த டிசம்பர் வரை 22,320 பேர் கொரேனாவுக்கு பலியாகி உள்ளனர். இதில் எது உண்மை? கர்நாடக முதல்வர், எம்.எல்.ஏ. சுதாகர். கர்நாடக பா.ஜ.க. தலைவர்கள் கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளை மட்டுமல்ல மருந்துகள், மாஸ்க், சானிடைசர், பி.இ.கிட்ஸ் மற்றும் இதர கொள்முதல் தொடர்பான விவரங்களையும் மறைத்துள்ளனர். கோவிட் தொடர்பாக கர்நாடக அரசு வெள்ளை அறிக்கை விட வேண்டும். கொரோனா வைரஸை சிகிச்சை மூலம் வெல்ல முடியும், பொய்களால் அல்ல. என பதிவு செய்து இருந்தார்.