கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சட்டப்பேரவைக்கு மாட்டு வண்டியில் வந்த எதிர்க்கட்சி தலைவர்கள்

கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சட்டப்பேரவைக்கு மாட்டு வண்டியில் வந்த எதிர்க்கட்சி தலைவர்கள்

கர்நாடகாவில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வை கண்டித்து, அம்மாநில சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் மாட்டு வண்டியில் வந்தனர்.

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை தற்சமயம் சிறிது குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் நாட்டின் பல முக்கிய நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100 என்ற அளவில்தான் உள்ளது. இதுதவிர சமையல் கியாஸ் விலையும் ஒரு பக்கம் உயர்ந்து கொண்டே வருகிறது. எரிபொருட்களின் விலை உயர்வால் சமானிய மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்.

கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சட்டப்பேரவைக்கு மாட்டு வண்டியில் வந்த எதிர்க்கட்சி தலைவர்கள்
டீசல், பெட்ரோல் விலை உயர்வு

எரிபொருள் விலை உயர்வுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். கர்நாடகாவில் தற்போது சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அம்மாநில சட்டப்பேரவைக்கு மாட்டு வண்டியில் சென்று இறங்கினர்.

கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சட்டப்பேரவைக்கு மாட்டு வண்டியில் வந்த எதிர்க்கட்சி தலைவர்கள்
சமையல் கியாஸ் சிலிண்டர்

கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் மற்றும் பிற கட்சி தலைவர்கள் நேற்று சதாசிவ் நகரில் உள்ள தங்களது வீடுகளிலிருந்து சட்டப்பேரவைக்கு மாட்டு வண்டியில் வந்த இறங்கினர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று சட்டப்பேரவைக்கு மாட்டு வண்டியில் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.