எஸ்.ஐ. வில்சன் கொலை: என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்

 

எஸ்.ஐ. வில்சன் கொலை: என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ்.ஐ வில்சன் கடந்த ஜனவரி மாதம் பணியிலிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அப்துல் சமீம் மற்றும் தஃவ்பீக் என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குற்றவாளிகள் என்று வெளியான சிசிடிவி காட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக தனிப்படைபோலீசார் விசாரித்து வந்த எஸ்.ஐ வில்சனின் கொலை வழக்கு கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது.

எஸ்.ஐ. வில்சன் கொலை: என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்

இதனையடுத்து எஸ்.ஐ வில்சனின் கொலை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தனிப்படை போலீசார் என்.ஐ.ஏ விடம் ஒப்படைத்தனர். வில்சனின் கொலை தொடர்பாக அனைத்து விசாரணையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் சென்னையிலுள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில், ஆறு பேர் மீது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.