கருப்பர் கூட்டம் யூடியூப் சானலுக்கு தடை விதிக்க வேண்டும்! – பா.ஜ.க புகார்

 

கருப்பர் கூட்டம் யூடியூப் சானலுக்கு தடை விதிக்க வேண்டும்! – பா.ஜ.க புகார்

கருப்பர் கூட்டம் யூடியூப் சானலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் வெளியிட்டு வருகிறது.

கருப்பர் கூட்டம் யூடியூப் சானலுக்கு தடை விதிக்க வேண்டும்! – பா.ஜ.க புகார்இந்த சானலை இஸ்லாமியர் நடத்துவதாக பா.ஜ.க குற்றம்சாட்டியுள்ளது. இந்த பக்கத்தை முடக்க வேண்டும் என்று பா.ஜ.க தரப்பில் அழுத்தம் தரப்படுகிறது. இந்த நிலையில் பாஜக சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், இந்துக்கள் வழிபடும் கடவுளை ஆபாசமாகப் பேசி,வீடியோ வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கருப்பர் கூட்டம் யூடியூப் சானலுக்கு தடை விதிக்க வேண்டும்! – பா.ஜ.க புகார்அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. கட்சியில் சமீபத்தில் இணைந்த பால் கனகராஜ் உள்ளிட்டோர் இந்த புகாரை வழங்கினர்.

கருப்பர் கூட்டம் யூடியூப் சானலுக்கு தடை விதிக்க வேண்டும்! – பா.ஜ.க புகார்இதற்கிடையே இந்துக்களை அவமானப்படுத்திய நபர் தி.க, தி.மு.க-வைச் சார்ந்தவர் என்றும் அவரை கைது செய்யாவிட்டால் பெரியார் சிலை மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் இந்து அமைப்புகள் எச்சரிக்கைவிடுத்துள்ளன. இதனால், சென்னையில்,அண்ணா சாலை மற்றும் பூந்தமல்லி சாலையில் உள்ள பெரியார் சிலைகளுக்கு, மாநகர காவல் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.