கொரோனாவில் மீண்டவர்களை தாக்கும் பூஞ்சை நோய்… தடுப்பு மருந்து பற்றாக்குறை – விழிபிதுங்கும் மாநிலங்கள்!

கொரோனாவில் மீண்டவர்களை தாக்கும் பூஞ்சை நோய்… தடுப்பு மருந்து பற்றாக்குறை – விழிபிதுங்கும் மாநிலங்கள்!

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ் பரவலின் வீரியம் இன்னும் அடங்கவில்லை. தற்போது கொரோனா இரண்டாம் அலை வாட்டி வதைத்து வருகிறது. முதல் அலையைக் காட்டிலும் அதி தீவிரமாக வைரஸ் பரவி வருகிறது. இதனால் குழந்தைகள், இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இளைஞர்களில் பலர் கொரோனாவால் பலியாகின்றனர். முன்பை விட ஆக்சிஜன் தேவை அதிகரித்திருக்கிறது. கடுமையான சிக்கலில் இந்தியாவே தவித்து வருகிறது.

கொரோனாவில் மீண்டவர்களை தாக்கும் பூஞ்சை நோய்… தடுப்பு மருந்து பற்றாக்குறை – விழிபிதுங்கும் மாநிலங்கள்!

மரணத்தின் விளிம்பு வரை சென்று கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கும் தற்போது வேறு ஒரு வடிவத்தில் அபாயம் உருவாகியுள்ளது. கொரோனாவின் தீவிரம் அதிகம் கொண்ட நோயாளிகளுக்கு ஸ்டீராய்டுகள் அளிக்கப்படுகின்றன. இதனால் அவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி பெருமளவு குறைந்து போகிறது. இதன் காரணமாக அவர்களின் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. சர்க்கரை அளவு அதிகரித்தவர்களுக்கும், சர்க்கரை நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மியூகோர்மைகோசிஸ் என்ற பூஞ்சையின் மூலம் பாதிப்பு ஏற்படுகிறது.

கொரோனாவில் மீண்டவர்களை தாக்கும் பூஞ்சை நோய்… தடுப்பு மருந்து பற்றாக்குறை – விழிபிதுங்கும் மாநிலங்கள்!

இதனை Black fungus அதாவது கருப்பு பூஞ்சை நோய் என்று அழைக்கின்றனர். கருப்பு பூஞ்சை நோய் என்பது மிக அரிதான நோயாகும். ஆனால் உயிரைக் குடிக்கும் மோசமான பூஞ்சை தொற்றாகும். இந்தப் பூஞ்சையானது நேரடியாக மூளையையும் நுரையீரலையும் பாதிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை மிக எளிதாக தாக்குகிறது. இந்த நோய் ஏற்பட்டால் கண்கள், மூக்கு பகுதியை சுற்றி வலி ஏற்படும். கண்கள் சிவத்தல், காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம், வாந்தியில் ரத்தம், மனநிலை மாற்றம் உள்ளிட்ட அறிகுறிகள் உண்டாகின்றன. சிலர் கண் பார்வையும் இழக்கின்றனர்.

கொரோனாவில் மீண்டவர்களை தாக்கும் பூஞ்சை நோய்… தடுப்பு மருந்து பற்றாக்குறை – விழிபிதுங்கும் மாநிலங்கள்!

இந்த புதிய வகை நோய் மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, டெல்லி, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 1,500 பேரும், குஜராத்த்தில் 40 பேரும், டெல்லியில் 100 பேரும், கர்நாடகாவில் 75 பேரும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வட மாநிலங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பவர்கள் சர்க்கரையைக் குறைக்க வலியுறுத்தப்பட்டுள்ளார்கள்.

கொரோனாவில் மீண்டவர்களை தாக்கும் பூஞ்சை நோய்… தடுப்பு மருந்து பற்றாக்குறை – விழிபிதுங்கும் மாநிலங்கள்!

கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தான் ஸ்டீராய்டுகள் வழங்கப்படும். இந்த ஸ்டீராய்டுகளால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதனால் கருப்பு பூஞ்சை நோய் எளிதில் பரவுகிறது. ஆனால் சிறிய அறிகுறிகள் இருப்பவர்களுக்கே ஸ்டீராய்டு வழங்கப்படுவதால், பெரும்பாலோனோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே ஸ்டீராய்டு வழங்குவதில் கவனம் தேவை என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவில் மீண்டவர்களை தாக்கும் பூஞ்சை நோய்… தடுப்பு மருந்து பற்றாக்குறை – விழிபிதுங்கும் மாநிலங்கள்!

இதனைக் குணப்படுத்த அம்ஃபோடெரிசின் பி (Amphotericin B) என்ற மருந்து மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இப்போது இம்மருந்தின் தேவை வட மாநிலங்களில் அதிகரித்துள்ளது. இதனால் இதன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவும் ஆலோசித்து வருகிறது. இதனுடன் பூஞ்சை தடுப்பு மருந்துகளின் உற்பத்தியும் அதிகரிக்கப்படும் என கூறியிருக்கிறது. இருப்பினும் பல்வேறு மாநிலங்கள் இப்போதே இம்மருந்துகளைக் கொள்முதல் செய்ய தொடங்கிவிட்டன.