புதுச்சேரியில் இன்று முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறக்க அனுமதி!

 

புதுச்சேரியில் இன்று முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறக்க அனுமதி!

புதுச்சேரியில் இன்று முதல் மத்திய அரசின் அறிவுறுத்தல் படி அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை திறக்க அனுமதியளித்து அரசு செயலர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தீபாவளி, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வருகிறது. இதனால் மக்கள் அதிகளவில் ஷாப்பிங் செய்ய ஆரம்பித்து விட்டனர். புதுச்சேரியில் பல முக்கிய இடங்களில், மக்கள் கூட்டம் களைகட்டுகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அளித்த முதல்வர், கடைகள் 9 மணி வரையில் திறந்திருக்க அனுமதி அளித்திருந்தார். தற்போது பண்டிகைக் கால விற்பனை நடப்பதால், நேரக்கட்டுப்பாடு சிரமத்தை அளிப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதுச்சேரியில் இன்று முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறக்க அனுமதி!


இந்த நிலையில், புதுச்சேரியில் முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறந்திருக்க முதல்வர் நாராயணசாமி அனுமதி அளித்துள்ளார். பண்டிகை காலத்தை முன்னிட்டு கடைகளின் திறப்பு இரவு 9 மணிக்கு பதிலாக இரவு 10 மணியாக நீட்டிக்கப்படுவதாகவும் கொரோனா தடுப்பு நடவடிக்கைளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அலுவலகங்கள், கடைகள், உணவகங்கள், ரெஸ்டாரண்ட், பார்கள் காய்கறிக்கடைகள், மளிகைக்கடைகள், தேநீர் கடைகள், மதுபானக் கடைகள் உள்ளிட்ட அனைத்தும் இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதி அளித்துள்ளார்.