கோவில்பட்டியில் 5 நாட்களுக்கு கடைகள் அடைப்பு – வியாபாரிகள் அறிவிப்பு!

 

கோவில்பட்டியில் 5 நாட்களுக்கு கடைகள் அடைப்பு – வியாபாரிகள் அறிவிப்பு!

தமிழகத்தைப் பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இன்று புதிதாக 3,756 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,22,50 ஆக அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையிலும், பாதிப்பு குறைந்ததாக இல்லை. சென்னையில் மட்டுமே 72,500 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இதனிடையே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர சில தளர்வுகளுடன் வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

கோவில்பட்டியில் 5 நாட்களுக்கு கடைகள் அடைப்பு – வியாபாரிகள் அறிவிப்பு!

ஆனால் இந்த மாத தொடக்கத்திலிருந்து ஒரே நாளில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக 3000 பேருக்கு தான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மக்களைச் சற்று ஆறுதல் அடையச் செய்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாகத் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஜூலை 11 முதல் 15 வரை கடைகள் அடைக்கப்படுவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர். மேலும், 5 நாட்களுக்குக் காய்கறிகள், மருந்து, பால் விற்பனை கடைகள் மட்டும் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று புதிதாக 141 பேருக்கு கொரோனா பரவியதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1558 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.