நாளுக்கு நாள் புதிய உச்சம்… பேரதிர்ச்சி கொடுக்கும் கொரோனா ரிப்போர்ட்!

 

நாளுக்கு நாள் புதிய உச்சம்… பேரதிர்ச்சி கொடுக்கும் கொரோனா ரிப்போர்ட்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.34 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசுகள் வார இறுதியில் பொதுமுடக்கம், இரவு நேர பொதுமுடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகின்றன. இருப்பினும், பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகமாக பரவிக் கொண்டிருக்கிறது. சில மாநிலங்களில், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியிருப்பதால் புதிதாக பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இடமில்லாத அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

நாளுக்கு நாள் புதிய உச்சம்… பேரதிர்ச்சி கொடுக்கும் கொரோனா ரிப்போர்ட்!

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,34,692 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,45,26,609 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒரே நாளில் 1,341 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,75,649 ஆக அதிகரித்துள்ளதாகவும் 1,23,354 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,26,71,220 ஆக அதிகரித்துள்ளதாகவும் 16,79,740 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நாளுக்கு நாள் புதிய உச்சம்… பேரதிர்ச்சி கொடுக்கும் கொரோனா ரிப்போர்ட்!

கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவையே உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3ம் இடத்தில் இருக்கிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டவுன் தீர்வு அல்ல என பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் திணறிக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.