அசாமின் அனைத்து பிரச்சினைக்கும் இந்திரா காந்தி, ராஜீவ் காந்திதான் காரணம்.. சிவ்ராஜ் சிங் சவுகான்

 

அசாமின் அனைத்து பிரச்சினைக்கும் இந்திரா காந்தி, ராஜீவ் காந்திதான் காரணம்.. சிவ்ராஜ் சிங் சவுகான்

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி அசாமுக்கு ஊடுருவல், வன்முறை, தீவிரவாதம், போராட்டம், பட்டினி, வேலையின்மை ஆகியவற்றை கொடுத்தனர் என சிவ்ராஜ் சிங் சவுகான் குற்றம் சாட்டினார்.

அசாம் மாநிலத்தில் 126 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் பா.ஜ.க., எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொள்வதில் உறுதியாக உள்ளது. இதற்காக பா.ஜ.க.வின் தேசிய தலைவர்களை அங்கு பிரசாரம் செய்து வருகின்றனர். அசாமில் திப்ருகார்க் மாவட்டத்தில் நாகர்காட்டியாவில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

அசாமின் அனைத்து பிரச்சினைக்கும் இந்திரா காந்தி, ராஜீவ் காந்திதான் காரணம்.. சிவ்ராஜ் சிங் சவுகான்
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

மகாத்மா காந்தியின் பாதையை காங்கிரஸ் பின்பற்றவில்லை. காங்கிரசும், ராகுல் காந்தியும் ஜின்னாவின் பாதையை பின்பற்றுகின்றனர். ஜின்னாவின் பாதை அசாமையும், இந்தியாவையும் அழித்து விடும். ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும், முஸ்லிம் தேசத்தை உருவாக்குவது குறித்து பேசும் பத்ருதீன் அஜ்மலுடன் காங்கிரஸ் கைகோர்த்து உள்ளது. அஜ்மலுடன் தருண் கோகாய் கூட்டணி வைத்தது கிடையாது. தற்போது காங்கிரஸ் கூட்டணி வைத்து இருப்பது தருண் கோகாய்க்கும் அவமானம்.

அசாமின் அனைத்து பிரச்சினைக்கும் இந்திரா காந்தி, ராஜீவ் காந்திதான் காரணம்.. சிவ்ராஜ் சிங் சவுகான்
காங்கிரஸ்

காங்கிரஸ் அசாமை 55 ஆண்டுகள் ஆட்சி செய்தது. ஆனால் அது என்ன கொடுத்தது? முகாலய மன்னார்களால் கூட அசாமை தோற்கடிக்க முடியவில்லை. இங்கு லச்சித் போர்புஹான் என்ற ஹீரோ இருந்ததால் அது நடக்கவில்லை. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் அசாமுக்கு ஊடுருவல், வன்முறை, தீவிரவாதம், போராட்டம், பட்டினி, வேலையின்மை ஆகியவற்றை மட்டுமே கொடுத்தனர். பிரதமர் மோடி மற்றும் அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் ஆகியோரின் தலைமையில் அசாம் வளர்ச்சியின் பாதையில் முன்னேற தொடங்கியது. ராகுல் காந்தி,பிரியங்கா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி வரலாற்றுப் பாடத்தில் மட்டும் இடம் பிடிக்கும். எதையும் சாதிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.