மாநிலம்தான் கோயில்… மக்கள்தான் தெய்வம்… நான்தான் பூசாரி… ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் சொல்றாரு..

மாநிலம்தான் கோயில்… மக்கள்தான் தெய்வம்… நான்தான் பூசாரி… ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் சொல்றாரு..

மத்திய பிரதேசம்தான் என் கோயில், மாநில மக்கள்தான் என் தெய்வம் நான்தான் அவர்களின் பூசாரி என்று அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. செஹோர் மாவட்டத்தில் பா.ஜ.க. கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட சிவ்ராஜ் சிங் சவுகான் பேசுகையில் கூறியதாவது: பா.ஜ.க. மக்களுக்கு சேவை செய்வதில் எந்த வாய்ப்பையும் விட்டு விடாது. நான் அனைத்து அரசு திட்டங்களையும் மீண்டும் தொடங்குவேன்.

மாநிலம்தான் கோயில்… மக்கள்தான் தெய்வம்… நான்தான் பூசாரி… ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் சொல்றாரு..
விவசாயி

முதல்வரின் விவசாயிகள் நலத்திட்டத்தின்கீழ், விவசாயிகள் ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் பெறுவார்கள். மத்திய பிரதேசம்தான் என் கோயில். மாநில மக்கள்தான் என் கடவுள். நான்தான் அவர்களின் பூசாரி. அனைவரும் தங்களது மகன்கள் மற்றும் மகள்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும்.

மாநிலம்தான் கோயில்… மக்கள்தான் தெய்வம்… நான்தான் பூசாரி… ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் சொல்றாரு..
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

அது ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., மருத்துவம் அல்லது எதுவாக இருந்தாலும், அவர்களால் (பெற்றோர்கள்) கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை என்றால் அதை மாநில அரசு பார்த்து கொள்ளும். உங்கள் ஆசிர்வாதத்தால்தான் நான் முதல்வராகி உள்ளேன். நான் உங்களை வணங்குகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.