ஜூலை வரை மாத மின் கட்டணமாக ரூ.100 செலுத்தினால் போதும்… சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவிப்பு…

ஜூலை வரை மாத மின் கட்டணமாக ரூ.100 செலுத்தினால் போதும்… சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவிப்பு…

மத்திய அரசின் லாக்டவுன் விதிமுறைகள் தளர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் டிவிட்டரில் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். டிவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: மத்திய பிரதேசத்துக்குள் வரும் அல்லது வெளியே செல்லவும் வாகனங்களுக்கு மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு பாஸ் தேவையில்லை. அதேசமயம் மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து இம்மாதம் 7ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜூலை வரை மாத மின் கட்டணமாக ரூ.100 செலுத்தினால் போதும்… சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவிப்பு…

வரும் 8ம் தேதி முதல் மாநிலத்தில் கட்டுப்படுத்துதல் மண்டலங்களுக்கு வெளியே வழிபாட்டு தலங்கள், மால்கள், ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்ட்ராண்ட்கள் திறந்து கொள்ளலாம். அனைத்து கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். அதேசமயம் ப்ளஸ் 2 தேர்வு நடத்துவதற்காக பள்ளிகள் திறக்கலாம். பள்ளிகள், கல்லூரிகள், கோச்சிங் நிறுவனங்களை மீண்டும் திறப்பது குறித்து வரும் நாட்களில் முடிவு எடுக்கப்படும்.

ஜூலை வரை மாத மின் கட்டணமாக ரூ.100 செலுத்தினால் போதும்… சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவிப்பு…

ஏப்ரல் மாதத்தில் ரூ.100க்கு குறைவாக மற்றும் மே மாதத்தில் ரூ.100 முதல் ரூ.400 வரை மின் கட்டணம் செலுத்தியவர்கள், மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மாதங்களுக்கு நிலையான மின் கட்டணமாக மாதத்துக்கு ரூ.100 மட்டும் மின் கட்டணம் செலுத்தினால் போதும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் மாதத்துக்கு ரூ.100 செலுத்தினால் போதும் என்ற அறிவிப்பு அம்மாநிலத்தில் உள்ள குறைந்த வருவாய் மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு பெரிய ஆறுதலாக இருக்கும்.