உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.வை தோற்கடிக்க ஜோடி சேரும் சித்தப்பாவும், மகனும்…

 

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.வை தோற்கடிக்க ஜோடி சேரும் சித்தப்பாவும், மகனும்…

உத்தர பிரதேசத்தில் அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும், சிவபால் யாதவின் பிரகிதி சமாஜ்வாடி (லோகியா) கட்சியும் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தர பிரதேசத்தில் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது சமாஜ்வாடி கட்சியில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவுக்கும், அவரது சித்தப்பா சிவபால் யாதவுக்கும் இடையே கட்சியில் அதிகார போட்டி ஏற்பட்டது. இதில் தனது சித்தப்பாவை அகிலேஷ் யாதவ் வென்று கட்சியை தன் வசம் கொண்டு வந்தார். இதனையடுத்து 2018ம் ஆண்டில் பிரகதிஷீல் சமாஜ்வாடி (லோகியா) என்ற கட்சியை தொடங்கி சிவபால் யாதவ் நடத்தி வருகிறார்.

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.வை தோற்கடிக்க ஜோடி சேரும் சித்தப்பாவும், மகனும்…
அகிலேஷ் யாதவ்

புதிய கட்சியை தொடங்கியது முதல் சித்தாப்பாவும், மகனும் எதிரும்புதிருமாக சண்டை கோழிகளாக இருந்து வந்தனர். இந்த சூழ்நிலையில் 2022ல் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைப்போம் என்று சிவபால் யாதவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிவபால் யாதவ் கூறியதாவது:

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.வை தோற்கடிக்க ஜோடி சேரும் சித்தப்பாவும், மகனும்…
பா.ஜ.க.

2022 உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைப்போம். சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைப்பதுதான் எங்களது முன்னுரிமை. மாநிலத்தில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக நாங்கள் பேசுவோம். பா.ஜ.க. தனது வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை. மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசுகளால் எடுக்கப்பட்ட முடிவுகள் நாட்டின் அல்லது மக்களின் நலனுக்கு எதிராக இருந்தன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.