மகாராஷ்டிராவில் கொரோனா அதிகரித்து இருந்தால், பிரதமருக்கும் அதில் சம பொறுப்பு உள்ளது… சிவ சேனா அதிரடி

மகாராஷ்டிராவில் கொரோனா அதிகரித்து இருந்தால், பிரதமருக்கும் அதில் சம பொறுப்பு உள்ளது… சிவ சேனா அதிரடி

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளது. நம் நாட்டில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில், அம்மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தால் பிரதமர் மோடிக்கும் சமமான பொறுப்பு உள்ளது என சிவ சேனா தனது அரசியல் பத்திரிகையான சாம்னாவில் காட்டமாக தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா அதிகரித்து இருந்தால், பிரதமருக்கும் அதில் சம பொறுப்பு உள்ளது… சிவ சேனா அதிரடி

சாம்னா பத்திரிகையின் தலையங்கத்தில், பா.ஜ.. அல்லா மாநிலங்களில் கோவிட்-19 பெயரில் ஊழல் செய்கின்றன என்ற பா.ஜ.க.வின் கூற்று ஆரோக்கியமான அரசியலின் அடையாளம் அல்ல. மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தால், நாட்டின் தலைவராக இருப்பதன் மூலம் பிரதமருக்கும் சமமான பொறுப்பு உள்ளது. குஜராத், ஹரியானா, மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இந்த தொற்றுநோய் அழிவை உருவாக்கியுள்ளது. இது தொடர்பான தகவல்களை டெல்லி அனுப்ப நாங்கள் தயாராக உள்ளோம்.

மகாராஷ்டிராவில் கொரோனா அதிகரித்து இருந்தால், பிரதமருக்கும் அதில் சம பொறுப்பு உள்ளது… சிவ சேனா அதிரடி

பா.ஜ.க. ஆளும் பல மாநிலங்கள் இடையூறு அரசாங்கங்கள், அவை மற்ற கட்சிகளின் அரசாங்களை கவிழ்ப்பதன் மூலம் ஆட்சிக்கு வந்தன. ஆனால் அவர்கள் இந்த மாநிலங்களின் தலைவிதியை எல்லாம் இறைவனிடம் விட்டுவிட்டார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கர்நாடக அமைச்சர் ஸ்ரீராமுலு, கொரோனாவிலிருந்து கடவுளால் மட்டுமே காப்பாற்ற முடியும் என கூறினார். அதனைத்தான் பா.ஜ.க. அரசுகள் தங்களது மாநிலங்களின் தலைவிதியை இறைவனிடம் விட்டுவிட்டார்கள் என சாம்னா பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.