இப்படியே போனால் சோவியத் யூனியன் போல் இந்தியா உடைந்து போகக்கூடும்… மோடி அரசை எச்சரித்த சிவ சேனா

 

இப்படியே போனால் சோவியத் யூனியன் போல் இந்தியா உடைந்து போகக்கூடும்… மோடி அரசை எச்சரித்த சிவ சேனா

மத்திய-மாநில அரசுகள் இடையிலான உறவுகள் மோசமடைந்து வருவதால் நாடு சோவியத் யூனியனை போல உடைந்து போகக்கூடும் என்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசை சிவசேனா எச்சரிக்கை செய்துள்ளது.

சிவ சேனாவின் அரசியல் பத்திரிகையான சாம்னாவில் நேற்று வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: உச்ச நீதிமன்றம் தனது கடமையை மறந்து விட்டது. அரசியல் ஆதாயங்களுக்காக மக்களுக்கு தீங்கு விளைவிக்கிறோம் என்பதை மத்திய அரசு உணரவில்லை என்றால், சோவியத் யூனியனை போல் நம் நாட்டில் உள்ள மாநிலங்கள் பிரிந்து செல்வதற்கு அதிக நேரம் எடுக்காது. 2020ம் ஆண்டை பார்த்தால், மத்திய அரசின் திறன் மற்றும் நம்பக்தன்மையை கேள்விக்குறியை உருவாக்கியது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று சாம்னாவின் கட்டுரையில் கூறப்பட்டு இருந்ததாவது:

இப்படியே போனால் சோவியத் யூனியன் போல் இந்தியா உடைந்து போகக்கூடும்… மோடி அரசை எச்சரித்த சிவ சேனா
சிவ சேனா

காங்கிரஸ் தலைமையை பா.ஜ.க. துணிந்து கிண்டல் செய்வது ஏன் என்பதை காங்கிரஸ் காரிய கமிட்டி விவாதிக்க வேண்டும். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நரேந்திர மோடி போன்ற வலுவான தலைவர் மற்றும் அமித் ஷா போன்ற அரசியல் நிர்வாகி இல்லை. திரிணாமுல் காங்கிரஸ், சிவ சேனா, அகாலி தளம், பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, ஜெகன் மோகன் ரெட்டியின் ஓ.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலங்கானாவலிருந்து கே.சந்திரசேகர ராவ், கர்நாடகாவின் எச்.டி. குமாரசாமி மற்றும் ஒடிசாவின் நவீன் பட்நாயக் உள்பட அனைவரும் பா.ஜ.க.வுக்கு எதிரான உள்ளார்கள். ஆனால் அவர்கள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இல்லை.

இப்படியே போனால் சோவியத் யூனியன் போல் இந்தியா உடைந்து போகக்கூடும்… மோடி அரசை எச்சரித்த சிவ சேனா
சரத் பவார்

இந்த அனைத்து கட்சிகளையும் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒருங்கிணைக்காவிட்டால், எதிர்க்கட்சிகளால் பலம்மிக்க மாற்றை வழங்க முடியாது. பவார் ஒரு சுயாதீனமான மற்றும் சக்தி வாய்ந்த ஆளுமை. பிரதமர் மோடி உள்பட ஒவ்வொரு கட்சியும் அவரது (சரத் பவார்) அனுபவத்தின் பலனை ஈர்க்கின்றன. மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் தனியுத்தத்தை நடத்தி வருகிறார். அவரது கட்சியை பிளப்படுத்த பா.ஜ.க. முயற்சி செய்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றுப்பட்டு அவருடன் (மம்தாவுடன்) நிற்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.